பக்கம்:ஒத்தை வீடு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 103 ஆண்மைக்குறைவு உள்ளவங்களுடைய நடத்தையைப் பற்றி விளக்கி, நீங்க தற்கொலை செய்தாலும் செய்துக்கலாம் என்று அவங்ககிட்டச் சொன்னபோது, அந்தம்மா, தனக்காக அழுகிறத நிறுத்திட்டு, உங்களுக்காக அழுகிறாங்க சார். இதுதான், இந்த நாட்டுப் பெண்களோட பண்பாடோ, அல்லது சுயத்தைத் தொலைக்கும் சீரழிவோ' கெஞ்சினாரோ. அவள் அடங்கினாள். "ஏம்மா. நீ வந்தது கவுன்சிலிங் செய்யுறதுக்கு. வக்கீலா மாறினால் எப்படி..? சங்கரிகிட்டேயும் கோளாறு இல்லாம இல்லை. பக்கத்து வீட்டுக்காரன் ஒரு மாதிரிப் பார்த்ததை. அது தனக்கு பிடிக்கல என்கிறதை... இவர்கிட்ட பகிரங்கமா சொல்லியிருக்கணும். செக்ஸ் லைப் பற்றி, படித்த பெண்ணுக்கு தெரிந்திருக்கணும். இவரு ஆயத்தமா நெருங்கும் போதெல்லாம், அந்தம்மா, தெரிந்தோ தெரியாமலோ, சில வார்த்தைகளைக் கொட்டியிருக்காங்க.. ஆனாலும், மிஸ்டர் மனோகர் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால், தப்பு ஒங்க மேல தொண்ணுறு சதவீதம். மீதி பத்து சதவீதம், அந்த பொண்ணு மேல." "நான் என்ன செய்யனும் டாக்டர்..? நீங்க என்ன சொன்னாலும் கட்டுப்படுறேன். டாக்டர்." "நாம் பிரச்சினையை நேருக்கு நேராய்ச் சந்திப்போமா? இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமே, உங்களோட ஆண்மைக் குறைவுதான். அந்தக் குறைவு மனோரீதியாலானதா? அல்லது ஆர்கானிக் அதாவது உடல் ரீதியாலானதா? என்கிறதை இனிமேல்தான் கண்டுபிடிக்கணும். மனோரீதியா கண்டுபிடிக்க உங்க மனசுல என்னல்லாம் உறுத்துதோ, அதை எல்லாம் எழுதுங்க. எத்தனை பக்கமானாலும் சரி. எழுதுறதை என்கிட்ட கொடுங்க. அதோட சில பிஸிகல் டெஸ்டுகளுக்கும் எழுதிக் கொடுக்கிறேன். இரண்டையும் வைத்து ஒரு முடிவுக்கு வரலாம்: "நல்ல முடிவு கிடைக்குமா டாக்டர்.?” "இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்க உண்மையை - அது எதுவாயிருந்தாலும் சந்திக்கத் தயாராகணும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/104&oldid=762155" இலிருந்து மீள்விக்கப்பட்டது