பக்கம்:ஒத்தை வீடு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஒத்தை வீடு வேலைக்குப் போய், குடும்பத்தோடு, ஊரை விட்டே, வேரோடும், வேரடி மண்ணோடும் போகவேண்டும் என்ற எண்ணம் ஒனக்கு ஏற்பட்டது. போதாக் குறைக்கு, பாவாடை தாவணியிலிருந்து சேலைக்கு வந்த ஒன் அக்கா, உள்ளூரிலேயே, பங்காளி பலமிக்க தேக்கன் குடும்பத்தில் நல்லவனும் வல்லவனுமான செளரி முத்துவைக் காதலித்து, அவனையே திருமணம் செய்து கொண்ட பிறகு, உன் வாழ்க்கையில் ஒரு வாசனை வீசியது. ஒன் மச்சானே, உன் குடும்பத்தின் காவல் தெய்வமானார். ஒன்னை மோட்டார் பைக்கில் கொண்டு போய் கல்லூரி வாசலில் விட்டார். ஒன்னை, ஒட்டைக் கடிகாரம் என்று நச்சரித்த பயல்களின் காதுகளைத் திருகினார். தலைகளில் குட்டினார். மனதில் சிறுவனாய் இருந்த நீ, சம வயதுக்கு வந்தாய். சுய சேர்க்கையைக் கூட கைவிட்டாய்." "ஆனால், வசந்தம், பாலையானது. செளரிமுத்து, மாரடைப்பால் இறந்தபோது, அவரது சொல்லுக்குக் கட்டுப் பட்டிருந்த குடும்பம், ஒன் அக்காவை, வீட்டை விட்டுத் துரத்தியது. அவள் வந்த வேளைதான், அண்ணன் போய்விட்டான் என்று மைத்துனர்கள் ஊர்ச் சாட்சியாக அவளை அடித்து விரட்டி னார்கள். மனைவிதான், கணவனின் வாரிசு என்று சொல்ல, ஊரில் அதைத் தெரிந்து வைத்திருந்தவர்கள் முன்வரவில்லை. மீண்டும் நீ, மனதுக்குள் சிறுவனாய் மாறிவிட்டாய்-உன்னுள் அந்தச் சிறுவன் அப்படியே இருக்கிறான். அவ்வப்போது வளர நினைக்கிற அந்தச் சிறுவனை, அம்மாவின் நெற்றிப் பள்ளமும், அக்காவின் விதவைக் கோலமும் வளர விடாமல் செய்கின்றன. ஒன் மனதில் தவிக்கும் அந்தச் சிறுவனைப் பெரியவனாக்கி விட்டால், ஒன் செக்ஸ் பிரச்சினை தீர்ந்தது மாதிரிதான். நீ, முழுமையான ஆணாய், மனைவியை நெருங்கும் போதெல்லாம், இந்தச் சிறுவன், மூக்கை நீட்டுகிறான். ஒன் மூக்கை அறுக்கிறான். அதோடு, ஒட்டைக் கடிகாரம். ஒட்டை என்ற சத்தம் தானாய்க் கேட்கிறது. இந்த வன்மமான, இளக்காரமான வார்த்தைகள், ஒன் வெளித் தோற்றத்தைக் கலைத்து, உள் தோற்றமான சிறுவனை முன்னிலைப் படுத்திவிட்டன. ஆகையால், இந்தச் சிறுவனை முதலில் வேண்டும். அல்லது, அவனை வளர்த்து, ஒரு வாலிபனாக்க வேண்டும். இது சிரமமமான காரியம் ஆனால், எனக்குச் சிரமமில்லாமல் செய்துட்டே." மனோகர், டாக்டரை ஒரு கேள்வியாய்ப் பார்த்தான். அவரும் பதிலாய்ப் பேசினார். 'ஒன்னை மாதிரிப் பிரச்சினைக்காரங்களுக்கு அதிரடிச் சிகிச்சை - அதுதான் ஷாக் ட்ரீட்மெண்ட் தேவைப்படும். ஆனால், ஒனக்குத் தேவையில்லை அந்த விடுதி நிகழ்ச்சிகள், ஒனக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/111&oldid=762163" இலிருந்து மீள்விக்கப்பட்டது