பக்கம்:ஒத்தை வீடு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 115 புரிஞ்சிட்டுப் பேசினால், பிரச்சினையில் பாதியளவு போயிடும். சொல்லுங்க மேடம்?" "அதாவது, கணவனை, முழுமையான ஆணாக்குவதில், ஒரு மனைவிக்கும் பொறுப்பு இருக்குதுன்னு சொல்ல வாரீங்க. நான் இதுல தோற்றுப் போயிட்டேன்." "தோற்கல. தோற்றுப் போனதாய் நினைக்கிறீங்க. கணவன் - மனைவி உறவில், மூன்று மாத காலத்தில் ஏற்படும் முட்டுக்கட்டை, ஒரு முட்டுச் சந்தல்ல. ஆண்டுக் கணக்கில், உங்களைவிட மோசமான நிலையில் இருந்தவர்களுடைய பிரச்சினைகளை அடியோடு தீர்த்து வைத்திருக்கிறோம். ஒங்க பிரச்சினை ஒங்களுக்கு அசாதாரணம். ஆனால், எங்களுக்கு சாதாரணம். மனோகரை, கணவராய்ப் பார்க்காமல், ஆண்மைக் குறைவில் அல்லாடுகிற ஒரு வாலிபனாய்ப் பாருங்க!" "ஆண்மைக் குறைவு உள்ளவர்கள், எப்படி நடப்பாங்கன்னு அந்தக் காலத்திலேயே விஞ்ஞான ஜாதகம் கணித்திருக்காங்க. அதன்படிதான், ஒங்க கணவர் நடந்துக்கிட்டார். அதே ஜாதகத்தில் பரிகாரமும் இருக்குது. அந்தப் பரிகாரம், ஒங்க கணவருக்குக் கொடுக்கப்பட்டு வருது. பொதுவாய், பணக்காரக் குடும்பங்களில் இப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தால், ஒசைப்படாமல் விவாகரத்து ஏற்படும். அடிமட்டக் குடும்பங்களில் ஏற்பட்டால், கட்டிய பெண்ணே ஒட்டை வண்டின்னு கணவனை வெளிப்படையாய் திட்டித் தீர்ப்பாள். நானே பலதடவை, இப்படிப்பட்ட வசவுகளை கேட்டிருக்கேன். ஆனால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிப்பது, நாம் இருக்கிற நடுத்தர வர்க்கந்தான்." "என்னை. என்னதான் செய்யச் சொல்றீங்க?" "அவருக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. இன்னும் இரண்டு மாத புரபேசன். அதாவது பரீட்சார்த்த காலம் இந்தக் கால வரம்புல, நீங்க அவரை குத்திக் காட்டக்கூடாது. அவரைப் பாசத்தோடு அணுகணும். ஏமாற்றத்தை எந்த வகையிலும் காட்டிக்கப்படாது. இன்றைக்குப் பரவாயில்லிங்கன்னு பொய்கூடச் சொல்லணும். இது வள்ளுவர் சொல்றது மாதிரி, புரை தீர்ந்த பொய் அதுலயும் முடியலைன்னா, அப்புறம் இருக்கவே இருக்கு விவாகரத்து. மறுமணம்." "நீங்க தப்புக் கணக்குப் போட்டுட்டிங்க அவர் கிட்ட இருந்து, நான் விலகிப் போக நினைக்கிறது உண்மைதான் எ ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/116&oldid=762168" இலிருந்து மீள்விக்கப்பட்டது