பக்கம்:ஒத்தை வீடு.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 ஒத்தை வீடு பெற்றோரால்தான் இந்த அறையில் முடங்கிக் கிடக்கேன். ஆனால், மறுமணத்தைப் பற்றி, நான் நினைத்தே பார்க் ல. பட்டது போதும்." "அப்படி நினைத்தால், நீங்கதான் பட்டுப் போவீங்க. விவாகரத்து செய்கிற எந்தப் பெண்ணுக்கும் மறுமணம் செய்ய உரிமை உண்டு. பழையவன் மாதிரிதான், புதியவன் இருப்பான் என்கிற அனுமானமே தவறு. ஒரு பெண் தனித்து வாழ்வதாலேயே, அவளுக்குத் தனித்துவம் வந்துவிடாது. ஒங்க பெற்றோரின் நிம்மதிக்காவது, மறுமணம் செய்துக்கணும். இது பெற்றோருக்கு செய்கிற வைத்தியம். ஒங்களுக்கு, நீங்களே ஏற்படுத்திக்கிற புனர்வாழ்வு." "என்ன மேடம் நீங்க. எனக்குத் தோணாதையும் சொல்லிக் கொடுக்கிறீங்க. நான் எதுக்கும் லோலோன்னு அலையுற லோ டைப் இல்லை, வசந்திம்மா." வசந்தி, அவளைத் திடுக்கிட்டுப் பார்த்தாள். சங்கரி, லேசாய்ப் புன்னகைத்தில், அவளுக்கு ஆறுதல். அந்த ஆறுதலை மகிழ்ச்சி யாக்கி, சங்கரி பேசினாள். "அவரோடு வாழ்கிறதா. இல்லையா என்கிறதுல என்னால இன்னும் ஒரு முடிவு எடுக்க முடியலதான். அவரோட அடாவடித் தனங்களை, அவருடைய ஆரம்பகால இனிய சுபாவமும், நேர்மையும் இன்னும் பின்னுக்குத் தள்ளுது. ஆனால், என்னோட மாமியாரை நினைத்தால்." "அந்தம்மாவும் ஒரு மனநோயாளிதான். வாழ்க்கையின் அடிமட்டத்தில் பிறந்து, அடிபட்டு அடிபட்டு அந்தம்மாவுக்கு உள்ளுர ஒருவித உறிஸ்டிரியாவும், சேடிஸமும் வந்துட்டு. நீங்க இல்லாட்டால், அந்தம்மா, சொந்த மகனையும், மகளையும்கூட பாடாய்படுத்தி இருப்பாங்க. அந்தம்மாவுக்கு, ஏவுகணைத் தாக்குதல் தான் முக்கியம். இலக்கு முக்கியமல்ல. இப்போ, அவங்களுக்கும் 'கவுன்சிலிங் செய்யுறோம். பாதி குணமாயிடும். நீங்க, கணவனைச் சந்திக்க, இப்போ தயாராய் இருக்கீங்க. சரியா." சங்கரி, நகத்தைக் கடித்தபோது, வசந்தி, டெலிபோனில் எட்டைச் சுழற்றி, ஆப்பரேட்டரிடம் லைன் கேட்டாள். உடனே, அவள், டாக்டர் சந்திரசேகரனிடம், சங்கரி, கணவனைச் சந்திக்கத் தயாராய் இருக்கும் விபரத்தைச் சொன்னாள். பிறகு, ஐந்தாறு நிமிடம் பேசினாள். பேசி முடித்துவிட்டு, டெலிபோன் குமிழை சரியாகப் பொருத்திவிட்டு உற்சாகமாகப் பேசினாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/117&oldid=762169" இலிருந்து மீள்விக்கப்பட்டது