கத்திமேல் நடந்து. நமக்குக் கிடைக்கும் தகவல்கள், சில சமயம் வாழ்க்கையைப் பற்றிய நமது அணுகுமுறையையே மாற்றிவிடுகின்றன, என்றாலும், இந்த மாற்றத்திற்கு தகவல்களின் தன்மையும், அவற்றை உள்வாங்கிக் கொள்கிறவரின் மனப்போக்கும். காரணமாகின்றன. என்னைப் பொறுத்த அளவில், ஏழை எளியவர்களைப் பற்றியும், வாழ்க்கையின் எந்த மட்டத்திலும் வதைபடும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் அதிகமாக எழுதிவந்தேன்; வருகிறேன். கைக்குக் கிடைத்த தகவல்கள், இந்த கருப் பொருளுக்கு வலிவு சேர்த்திருக்கின்றன, எனது அரசுப்பணி சார்பாக சுற்றுப்பயணம் செய்தபோதும், புதிய நூல்களைப் படிக்கும்போதும், ஒவ்வொரு துறையிலும் வளமான தகவல்களைக் கொண்ட நிபுணர்களை அந்திக்கும்போதும், நான், அதுவரை பெறாத புதிய தகவல் தாக்கங்களைப் பெறுகிறேன். இவற்றை சமூக உலைக் களத்தில், புடம் போடுகிறேன். இந்தத் தகவல்களை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது எனது அணுகுமுறை மாறாமல், ஒரு கிரியா ஊக்கியாகவே இருந்து வருகிறேன். ஆனாலும், நான் மாறாமல், எனது படைப்புக்கள் மாறியிருக்கின்றின. இவற்றின் சமூகத்தளம் அப்படியே இருந்தாலும், அதன் வெளிப்பாடுகள், மற்ற படைப்புகளில் இருந்து, மாறுபட்டு நிற்பதாக நினைக்கிறேன்."வாடாமல்லி"யும், "பாலைப்புறா"வும் இப்படி, ஆய்வு செய்து எழுதப்பட்ட படைப்புக்கள். திசைமாறும் எழுத்தாளக் கவனம். மானுடத்தில், கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் எதிர்நோக்கும் ஆண்மைக் குறைவு பிரச்சினையைப் பற்றி, ஒத்தை வீடு, கலை வடிவத்தில் ஆய்வு செய்கிறது. முற்றிலும், ஆண்மையின்மை என்பது வேறு ஆண்மைக் குறைவு என்பது வேறு. இதனை, டாக்டர். க. காந்தராஜ் அவர்கள், நான் நினைத்ததுபோல், அருமையாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். ஆண்மை அற்றவன், தன் பாரத்தை, விதியின்மேல் இறக்கி வைத்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்ப்பான். ஆனால், ஆண்மைக் குறைவு உள்ளவன் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு, அத்தனை ஆசைகளும் உண்டு. ஆனால், அந்த ஆசைகளை, முழுமையாய் செயல்படுத்த முடியாதவரிைகிறான். மனைவிக்கோ அல்லது மற்ற பெண்ணுக்கோ, ஆரம்ப சூரத்தனமாக ஒரு எதிர்பார்ப்பைக் கொடுத்துவிட்டு, பிறகு அதையே தன்ைைமீறி தரைமட்டமாக்கி விடுகிறான். இவன், நொந்து நொந்து வெந்து போகிறவன். நமது இரக்கத்திற்கு உரியவன்.
பக்கம்:ஒத்தை வீடு.pdf/12
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
