பக்கம்:ஒத்தை வீடு.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 119 என்பதுபோல், அவனைப் பார்த்தாள். பார்க்கப் பார்க்க தனது மகிழ்ச்சி, மடிந்து, அவனது கோலம் மனதைக் குடைந்தது. பத்து நாளையத் தாடி, கசங்கிப் போன உடை உள்ளுக்குள் போன கன்னங்கள். அய்யோ, இது என்ன அலங்கோலம்' மனோகர், தட்டுத் தடுமாறி தழுதழுத்த குரலில் விளக்கினான். "நீ சேரவேண்டிய அலுவலகத்துக்குப் போய், தலைமை அதிகாரியைச் சந்தித்தேன். உனக்கு சுகமானதும், வேலையில் சேர்த்திடுவேன்னு அவகாசம் கேட்டேன். உடனே, அந்தப் பெரிய மனிதர், 'வெளியூர்ல அவங்க அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ சீரியஸ்னும், இதனால ஒங்க ஒப்பு அங்கே, போயிருக்காங்கன்னும் ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்கச் சொன்னார். ஒனக்கு சுகமில்லைன்னு சொன்னால், மெடிகல் சர்டிபிகேட்டில் பிரச்சினை வரும் என்றார். நானும், ஒங்கம்மா, மதுரையில் படுத்த படுக்கையாய் இருக்கிறதாய் எழுதிக் கொடுத்தேன். எந்த நேரம் பொய் சொன்னேனோ, அது எங்கம்மா விஷயத்துல மெய்யாயிட்டு." சங்கரி, அவனை நேருக்கு நேராய்ப் பார்த்து, முதல் தடவையாக அதே சமயம், எதார்த்தமான குரலில் கேட்டாள். "என்னாச்சு. என்னால எல்லாருக்குமே பிரச்சினைதான். என்னாச்சு." "பயப்படும்படியா இல்ல. நாலு நாள் படுக்கை வாசம். இப்போ பக்கத்து வீட்டுக்காரனைத் திட்டுற அளவுக்குத் தேறிட்டாங்க. ஐ. ஆம் ஸாரி சங்கரி. ஒன் விஷயத்துல, அரக்கத்தனமா நடந்துக் கிட்டேன்னு, எங்கம்மாவே என்னைத் திட்டுறாங்க.." சங்கரி, சகவாச தோசத்தில் கேட்பதுபோல, கேட்டாள். "ஒங்க அக்காவுக்கு ஏதாவது செய்தீங்களா.." "ஆமாம். என் போலீஸ் எஸ்.பி. பிரெண்டைப் பார்த்தேன். அவரு, எங்க மாவட்ட எஸ்.பி. கிட்டே பேசினார். இரண்டு நாளுல அக்காகிட்டே தகராறுக்குப் போன அத்தனை பேரும், இங்கே வீட்டுக்கு வந்தாங்க. என் காதைப் பிடித்துத் திருகுனவன் முதல் இளக்காரமாய்ப் பார்த்தவனுங்க வரை அத்தனை பேரும் வந்தாங்க. காலுல விழாத குறையாக் கெஞ்சினாங்க. அக்காவும் சமரசத்திற்குச் சம்மதிச்சிட்டாள். பிரச்சினை தீர்ந்துட்டு.” "கடைசில. எல்லாரும் தர்மத்தை விட, போலீஸுக்குத்தான் பயப்படுறாங்க. ஒங்க அக்காவுக்கு. நீங்க இருக்கீங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/120&oldid=762173" இலிருந்து மீள்விக்கப்பட்டது