பக்கம்:ஒத்தை வீடு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதைமண் சென்னைப் பெருநகரின் இதயப்பகுதி; அதற்குப் பைபாஸ் சர்ஜரி செய்தது போன்ற கட்டிடத் தொகுதிகள். அத்தனையும் வானம் அளப்பவை. இதில் முக்கோணமாய் முகம் காட்டும் மூன்று திரையரங்குகள். இந்தக் கட்டிடத் தொகுதிக்குப் பின்னால் விரிந்து பரந்த ஆள் நடமாட்டம் இல்லாத வளாகம் பென்ஸ், டாடா கமோ, மாருதி, சான்ரோ, இண்டிகா போன்ற பல்வேறு கார்கள், கிழித்த கோடுகளை மீறி நின்றன. இவற்றின் அருகே பல்வேறு வண்ணத்திலான இரண்டு சக்கர வாகனங்கள்; ஒரு ஓரத்தில் சைக்கிள்கள். இந்த வளாகத்தின் உள்முனையில் பத்து படிக்கட்டுக்கள். கீழே இறங்கிப் போனால் அண்டர் கிரவுண்டான அடிவாரத் தளம். பளபளப்பான கடப்பா மேனித் தரை நடந்தால் காலுக்கு ஒரு சுகம்; உள்ளே வருகிறவர்களை வரவேற்பதற்காக, ஒரு காதில் மட்டும் கடுக்கன் போட்ட விரிந்த சடை இளைஞர்கள் இரண்டு பேர், கோட்டும் சூட்டுமாய் நின்றார்கள் "ஹலோ என்பதற்கு பதிலாக ஒவ்வொருவரிடமும் "ஹாய் கேய்" என்றார்கள். அடிவாரத் தளத்தில் வடக்கு முனையில் அலங்கரித்த மேடை, மிருதங்க, வீணை, வயலின், கடம் முதலிய வித்தகர்கள் தத்தம் கருவிகளோடு அவற்றை செல்லத் தட்டாய் தட்டியபடியே இருந்தார்கள். இவர்கள் மத்தியில், ஒரு இளம் பாடகன் மேடையின் மேட்டுப் பகுதியில், காகிதப் பூக்களால் தோரணமாய் சுருள் சுருளாய் கட்டப்பட்டிருந்தன பின்தளத்தில் தில்லை நடராஜருக்குப் பதிலாக, அர்த்த நாரீஸ்வார் சிலை அதன் ஒரு கண்ணில் நளினப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/125&oldid=762178" இலிருந்து மீள்விக்கப்பட்டது