128 புதைமண் குருவான நட்டுவனாரை கைகூப்பி, அப்படியே திரும்பிய இடத்திற்கு திரும்பி, அவைக்கு வணக்கம் போட்டான். பின்னர் உடம்பின் நடுப்பகுதியில் பூமத்தியரேகை மாதிரியான ஒரு கற்பனைக் கோட்டை வரைந்து "சம பங்கமாய்” நின்றான். அப்போது தாள லயத்துடன் பாடல் அனுபல்லவியாய் ஒலித்தது. பல்லவி "ஆணும் ஆணும் உறவு கொண்டால் - நீங்கள் அலட்டிக்க என்னய்யா இருக்குது? ஓரின உறவு, எங்களின் உரிமை - இந்த உரிமையை பறிப்பது, உங்களின் மடமை! அனுபல்லவி என்னய்யா நியாயம்? இதுதான் அநியாயம்! பலத்த கைத்தட்டலுக்கு, இடையே இப்படி பாட்டு ஒலித்த போது, மோகனன் ஒரு பக்கம் சாய்ந்தாடி, "அபங்கம் செய்தான். முக்கோனமாய் உடலாட்டி "திரிபங்கம் போட்டான். பின்னர் அய்யப்ப சாமிபோல் குத்துக்காலில் உட்கார்ந்து அவற்றில் இரு கைகளையும் வேலியாக்கி வேக வேகமாய் உட்கார்ந்தான். அப்படியே அவன் எழுந்தபோது, இன்னொருவன் அலங்கார மேடைக்கு வந்தான். இவனை அடிக்கப் போவது போல் துரத்திக் கொண்டே கையை ஓங்கினான். மோகனன், அவனுக்குப் பயந்தவன் போல் கை நடுங்கி, கால் நடுங்கி மேடையின் மறுமுனைக்கு அபிநயமாய் போனான். உடனே, உச்ச கட்டத்தில் இசையொலி - விடாதே பிடி என்பது மாதிரி ஒலித்தது. அவ்வளவுதான். மோகனன் அடிக்க வந்தவனை காலை வாரி குப்புறப் போட்டான். அவன் மேல் கவிழ்ந்து படுத்தான். "அய்யோ அய்யோ" என்று சிறிது நேரம் கீழே கிடந்தவன் அலறினான். பிறகு "ஆகா ஆகா" என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் குப்புறப்படுத்த மோகனனின் கழுத்தை பிடித்துக் கொண்டான். உடனே பேரவையில் இருந்து "ஒன்ஸ்மோர்” என்று பல "மோர்கள்" ஒலித்தன. அதற்குள் அது முடிந்து, மீண்டும் மோகனனின் தனித்துவ நாட்டியம். பல்லவி பல தடவை ஒலித்தது ஒவ்வொரு தடவைக்கும் ஒவ்வொரு விதமாக மோகனன் ஆடினான் "வர்ணம்" என்ற நாட்டிய இலக்கணப்படி சுழன்றான்; சுற்றினான்; சாணத்திற்கு ஏற்ப பாடுவதுபோல் வாயசைத்தான்.
பக்கம்:ஒத்தை வீடு.pdf/128
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
