பக்கம்:ஒத்தை வீடு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 புதைமண் மேலே தூக்கி எம்பினான். எம்பி எம்பி குதித்தான். கை தட்டல்கள் வலுத்தன. மேடை குலுங்கியது. பின்னர் ஒரு காலை தரையில் ஊன்றிக் கொண்டே கண் புருவங்கள் வேக வேகமாய் அசைய அசைய, இன்னொரு காலை வட்ட வட்டமாய்ச் சுற்றி உடம்பையே பம்பரமாக்கினான். பூவாய் விரிந்தாடினான். மொட்டாய் குவிந்தாடினான். அந்தரத்தில் பல்டி அடித்தான். குறுக்கு நெடுக்குமாய் துள்ளினான். மோகனன், ஆட்டத்தை முடித்துவிட்டு, அவையோரைப் பார்த்தான். அங்குள்ள அனைவருக்கும் சீருடை வேலைக்காரர்கள் ஒவ்வொரு வெள்ளைக் கிளாசிலும் கால்வாசியை ரத்தக் கலராக்கி கொடுத்தார்கள். இன்னும் சிலர் கிளாஸ்களோடு வரிசையில் அமர்ந்தவர்கள் முன்னே, தட்டுக்களோடு பணிந்து குனிந்து நகர்ந்தார்கள். அப்போது, மோகனன் அவைக்கு ஒரு அறிவிப்பு கொடுத்தான். "பெண்ணாதிக்கதிலிருந்து விடுபட்ட "கேய்" தோழர்களே! இப்போது உங்களுக்கு, ஒரு நல்லவரை வல்லவரை அறிமுகப் படுத்தப்போகிறேன். ஆனால் அவர் "கேய்" இல்லை. கேய்களோடு நட்பாக இருப்பவர். தமிழக அரசின் எய்ட்ஸ் பிரிவில் இணை இயக்குநராக இருந்த, சிறந்த பேச்சாளர். இப்போது அரசாங்க பொது மருத்துவமனையில் எஸ்.டி.டி - அதுதான் பாலியல் நோய் பிரிவிற்கு தலைவராக இருக்கிறார். ஒரு முன்னாள் அமைச்சரின் தம்பி. இவர் நினைத்திருந்தால், அமெரிக்காவிற்கு என்ன, அண்ணனின் உதவியால் நிலவுக்கே போயிருக்கலாம். ஆனாலும், சுயமரியாதைக் காரர். இன்னும் டெப்டி டைரக்டர் அந்தஸ்துலேயே இருப்பவர். இவர் எய்ட்ஸ் நோயில் ஒரு அதாரிட்டி நமது தோழர். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை ஏதும் செய்து விடாதீர்கள். இப்போது அவர் மேடைக்கு வரப்போகிறார். அவர்தான் டாக்டர் காந்தராஜ், காந்தராஜ் அவர்களே! மேடைக்கு வாருங்கள்." டாக்டர். காந்தராஜ், மேடையில் போடப்பட்டிருந்த அலங்கார நாற்காலியில் விட்டு விட்டுத் தட்டப்பட்ட கைதட்டுக்களோடும், விசில் சத்தங்களோடும் உட்கார்ந்தார். அவையைப் பார்த்தார். அவருக்கு பழக்கப்பட்ட டாக்டர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், வகையறாக்களும் இருப்பதைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார். அத்தனை பேரும் மிளகாய் பஜ்ஜி, மீன் வறுவல், சிக்கன் பிரைகள் சாட்சியாக மதுக் கிண்ணத்தை வாயில் சொருகியபோது, டாக்டர் காந்தராஜ், முன்னால் இருந்த மைக்கில், பொதுப்படையாகப் பேசினார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/130&oldid=762184" இலிருந்து மீள்விக்கப்பட்டது