பக்கம்:ஒத்தை வீடு.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 புதைமண் செல்வாவின் முகம் சுண்டிப் போயிற்று. சித்திக்காரி, இப்படி குத்திக் காட்டுவது வழக்கம்தான். அந்த வழக்கமான ஏச்சை வாங்கிக் கொள்வதை, இவன் ஒரு பழக்கமாக்கிக் கொண்டவன்தான். ஆனாலும், கவிதா உள்ளத்தில் இருக்கும் இந்த சமயத்தில், சித்தி அப்படிக் கத்தியது சுய அனுதாபத்தை கொடுத்தது. விளக்கை அணைக்க மறந்தவனாய், தனது வருத்தத்திற்கு அடைக்கலம் தேடுவதுபோல், கவிதாவின் காதலையும், கடற்கரையையும் நினைத்துக் கொண்டான். அவன் கண் முன்னால் கடற்கரை தோன்றியது. கவிதா தோன்றினாள். மற்ற யாரும் தோன்றவில்லை அந்தச் சந்திப்பு நிகழ்ச்சி பிம்பங்களாய் வந்து கொண்டிருந்தன. ラ கள்ளக் காதலர்களையும், கள்ளங் கபடமற்ற காதலர்களையும் கண்ணகி சிலை, ஒற்றைச் சிலம்போடு மறைத்து வைத்தாளோ அல்லது தனக்கு கிடைக்காத சுகங்கள் எல்லாம் இவர்களுக்கு கிடைக்கிறதே என்ற ஆதங்கத்தில் முகம் திருப்பி, அவர்களுக்கு முதுகைக் காட்டுகிறாளோ அன்றைய இளங்கோ அடிகளுக்கும் இன்றைய பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் மட்டுமே வெளிச்சம். கவிதாவும், செல்வாவும் மெரினா கடற்கரையில் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடைப்பட்ட இரண்டும், கெட்டான் மண்வெளியில் உட்கார்ந்தார்கள். எதுக்கும் கைய கொஞ்சம் தள்ளி வையுங்க என்று அவனைத் தள்ளிக் கொண்டே கவிதா செல்லச் சிணுங்களாய் சிணுங்கினாள். அதோடு முன்னெச்சரிக்கை. வாய்க்கு வந்தது, வயிற்றுக்கு வந்துவிடக்கூடாதே என்ற பயம். அது பயமுறுத்தலாக வெடித்தது. திடீரென்று, வீட்டில் நடந்த ரகளை நினைவுக்கு வந்தது. செல்வா அங்கே இல்லாதது போல் அனுமானித்துக் கொண்டதுபோல், கவிதா, தலையைத் தொங்க்ப் போட்டாள். உடனடியாக அவளது மாற்றத்தை புரிந்து கொண்ட செல்வா, இப்படிக் கேட்டான். "ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே கவிதா." "இன்னைக்கு வீட்ல ஒரே ரகளை எங்கண்ணன் மோகனன், வீட்டுக்கு எப்பவாவது ஒரு தடவை வருவான். வந்த உடனேயே, அப்பா கிட்ட பணம் கேட்பான் அடிக்கப்போறது மாதிரி கையை ஒங்குவான் நான் தடுக்கப் போனால், என்னையும் கெட் கெட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/136&oldid=762190" இலிருந்து மீள்விக்கப்பட்டது