பக்கம்:ஒத்தை வீடு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XII இவற்றைப் படிக்கும் வாசகருக்கு இந்த இரு பிரச்சினைகளுக்கும், முடிவு கட்டலாம் என்ற ஒரு நம்பிக்கை உணர்வை, தோற்றுவிக்கவேண்டும். அதற்கு, யதார்த்தமான சிகிச்சை முறைகளை, உள்ளது உள்ளபடியே கொடுக்க வேண்டியது, அவசியமாகிவிட்டது. கதையை மட்டுமே விரும்பு கிறவர்களுக்கு, இந்த இரு படைப்புக்களின் இறுதி அத்தியாயங்கள், சலிப் பூட்டலாம். ஆனால், இவை கருத்தைச் சுற்றிய படைப்புக்கள் படைப்பைச் சுற்றிய கருத்துக்கள் அல்ல. இவற்றைப் படிக்கிற ஒரு சராசரி வாசகருக்கு, பாலியல் திரிபுவாதிகளை, அனுதாபத்துடன் நோக்கவும், இயலுமானால் மீட்கவும் வகை செய்யும் என்றும் நம்புகிறேன். "ஒத்தை வீடு", "மாலைமதி"யில் வெளியான உடனேயே, கொடைக்கானலில் உள்ள, தன்மைர்வ தொண்டு நிறுவனம் ஒன்று, இதனை தம்பதியருக்கு வழங்கும் ஆலோசனைக்கு, ஒரு ஆதார நூலாக வைத்திருப்பதாய் அறிகிறேன். இந்த இரண்டு படைப்புகளும், "மாலைமதி"யில், வெளியானவை. பொதுவாக, மாத நாவல்கள், வாசகனை மலினப்படுத்தும் வகையிலிலேயே வெளியிடப்படுவண்டு. என்றாலும், நான் எப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம், அப்படியே பிரசுரிக்கப்படும் என்று வாக்களித்ததோடு, தரமான ஒவியங்களோடு, அந்த வாக்கை நிறைவேற்றிய, "குமுதம்" ஆசிரியக் குழுவிற்கு, என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரண்டு படைப்புக்கருக்கள், உருவம் பெறுவதற்கு, டாக்டர். க. காந்தராஜ் அவர்களே காரணமாவார். இந்த படைப்பிற்கு ஒரு அற்புதமான முன்னுரையையும் வழங்கியிருக்கிறார். அவர் தொழில் முறையில், பாலியல் நிபுணராக இருந்தாலும், பொது வாழ்வில், மிகச் சிறந்த பேச்சாளர்; இலக்கியவாதி. அவருக்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், வட சென்னையில் வாழும், தாவரயியல் பேராசிரியர், முனைவர். சுப்பிரமணியன் அவர்கள், வழக்கம்போல், பல அரிய விஞ்ஞானத் தகவல்களை தந்துதவி, இந்த படைப்பை வளப்படுத்தியதற்காக, நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த நூலை, ஏகலைவனின் பிற நூல்களைப்போல், அருமையாக அச்சிட்டுக் கொடுத்த மணிவாசக நூலகப் பேராசிரியரும் சிந்தனையாளருமான முனைவர் ச. மெய்யப்பன், அவருடன் இணைந்து பணியாற்றும் தோழர்கள் சோமு, குருமூர்த்தி ஆகியோருக்கும், இந்த மாதிரியான, அறிவும் உணர்வும் கலந்த படைப்புக்களை எதிர்பார்த்து வாங்கிப் படிக்கும், எண்ணற்ற வாசகத் தோழர்களுக்கும், என் மனமார்ந்த நன்றி, தோழமையுடன், க. சமுத்திரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/14&oldid=762194" இலிருந்து மீள்விக்கப்பட்டது