பக்கம்:ஒத்தை வீடு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14U புதைமண் நல்ல தமிழ் வருமாம். கலைஞர் தமிழை கண் மூடிக்கிட்டே ஒப்பிப்பாராம் அந்தக் காலத்துல பெண்கள் ஆறு, அஞ்சு படிச்சிட்டு பீடி சுத்துனாங்க. எட்டாவது வகுப்பான இஎஸ்.எல்.சி. படித்துட்டு ரெண்டு வருவும் டிரெயினிங் படிச்சுட்டு வாத்தியாரம்மாவா வந்தவங்க பின் கொசுவம் கட்டுகிற பெண்கள் மத்தியில இவங்க முன் கொசுவம் வச்சு புடவை கட்டினாங்களாம். வாத்தியாரம்மாக்களுக்கு செகண்டிரி கிரேட் டீச்சர், இல்லன்னா அந்தக் காலத்து பெரிய படிப்பான எஸ்.எஸ்.எல்.சி. வாலிபர்கள் பிடிக்குமாம். பீடி சுத்துற பெண்களுக்கு ஹீரோ டெய்லர், ஒயிர்மேன், பீடிக்கடை ஏஜெண்டு, கணக்கப்பிள்ளை, பெட்டிக் கட்ை இளைஞன், சைக்கிளில் மிட்டாய் போடும் வியாபாரி. ஆக மொத்தத்துல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொருத்தி மேல கண்ணாம். ஆனால், தமிழ்தான் வராதாம். அப்பாகிட்ட வந்து "லவ் லெட்டர் எழுதித் தரும்படி கேட்பாங்களாம். உடனே எங்கப்பா கலைஞர் பாணியில, கண்ணே. பெண்ணே. முத்தே மாணிக்கமே. இடையில்லா இளம் பெண்ணே. வானத்துச் சந்திரனே. பூமியில் உதித்த புதுமலரே. காணியில் பூக்கும் செண்பகமே. உன் புருவங்கள் வேல். உன் விழிகள் மீன். உன் கழுத்தோ சங்கு என்கிற பாணியில் எழுதிக் கொடுப்பாராம். ஒருவேளை காதலுக்கு பதிலாக, எழுதிக் கொடுத்தவரையும், எழுதச் சொன்னவரையும் கம்பத்தில் கட்டி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதைமேல் ஏற்றிவிடலாம் என்ற அச்சத்தில், எங்கப்பாவே சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய வர்ணனையை, மார்பகத்திற்கு மேலே தான் வைத்துக் கொள்வாராம்.” சீ போங்க இந்த மாதிரி பேசுறதெல்லாம் எனக்குப்பிடிக்காது. சரி மேற்கொண்டு சொல்லுங்க. பிடிக்காட்டியும் கேட்டுத் தொலைக்கேன்" வீட்ல அப்பா அம்மாகிட்டயும் அண்ணன்மார் கிட்டயும் மூண்டக்கண்ணி, கட்டையில போறவள், மூதேவி, மேனா மினுக்கி, க்வுகண்ணி, சண்டாளி, சதிகாரி, பிடாரி, பேய், வீட்டிக்கெடுக்கிற ஊமச்சி, பல்லிளிச்சாள் என்று பல்வேறு பட்டங்களை வாங்கிக் கொள்ளும் இந்தப் பெண்களுக்கு கண்ணே கண்மணியே என்ற வசன நடையில் எழுதிய கடிதத்தை, எழுத்து கூட்டிப படித்தபிறகு, எழுதியவன் மீது ஒரு கிக் வந்துவிடுமாம். அப்புறம் புளியந்தோப்பாம். இல்லன்னா கரும்புத்தோட்டம்.” அப்போ ஒங்கப்பாவுக்கு ஏகப்பட்ட காதலிகளா? நீ வேற ... எங்கப்பாவுக்கு, அப்போ வயதே பதினாலுதான். டெய்லர், ஒயர்மேன் மாதிரி ஆட்களுக்கு இந்த மாதிரி லெட்டர்கள,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/140&oldid=762195" இலிருந்து மீள்விக்கப்பட்டது