பக்கம்:ஒத்தை வீடு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 புதைமண் புதுக்கவிதையாய் வடித்துக் கொண்டு வாங்க... வரணும். வந்தாகணும்.” "கவிதையா? நானா?” 'ரெண்டுந்தான்.” கவிதா வெட்டொன்று துண்டு ரெண்டாய் பேசப் பேச, செல்வா அப்படி ஆனவன்போல் துடி துடித்தான். கவிதை. அதுவும் புதுக்கவிதை. அய்யகோ. (இது அவன் தந்தை, கலைஞரின் தாக்கத்தால் அடிக்கடி சொல்லும் வார்த்தை) கவிதாவிடம் அடைக்கலமாகவும் அநாதையாகவும் நினைவலைகளில் பயணம் செய்த செல்வா, அப்படியே தூங்கிப் போனான். நள்ளிரவில் செல்வாவை, சித்திக்காரி யதார்த்தத்திற்கு கொண்டு வந்தாள். "உன் மனசுல என்னடா நினைப்பு? இன்னும் விளக்கை அணைக்காமல் இருக்கே? நான் சொன்னதுக்கு ஒரு மட்டு மரியாதை வேண்டாம்? அவர் வரட்டும். நாளைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்." செல்வா, இரண்டு துண்டாய் ஆனவன்போல், விளக்கை அனைத்துவிட்டுப் படுத்தான். 42 காலை ஐந்து மணிக்கெல்லாம், கடிகார அலாரம் அலறியது. அதை அப்படியே விட்டால், சித்தி வந்து திட்டுவாள். சித்தப்பா இருக்கும் சமயத்தில் ஆறு மணிக்கும், இல்லாத சமயத்தில் ஏழு ஏழரை மணிக்கும் தூக்கத்திலிருந்து விடுபடுபவள். ஆகையால் செல்வா, படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து அலாரப் பட்டனை ஒரே அமுக்காக அமுக்கினான். இரவில் கடைசியாக தோன்றும் நினைவு, காலையில் எழுந்ததும் மனதில் முதலாக வரும் என்பார்கள். இதற்கேற்ப செல்வாவிற்கும் புதுக்கவிதையும் கவிதாவும் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். புதிதாக ஐந்தாறு காகிதங்களை அடுக்கிக் கொண்டு கவிதை எழுதப் போனான். அது, கழுதைமேல் சவாரி செய்வதுபோல் ஆகிவிட்டது. வடிவத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/142&oldid=762197" இலிருந்து மீள்விக்கப்பட்டது