பக்கம்:ஒத்தை வீடு.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1453 புதைமண் சொல்விக் கொடுப்பதுபோல் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். செல்வா அந்தக் கட்டுரையை மூன்று தடவை படித்தான். அந்தக் கட்டுரைக்கு ஏற்ப எழுதத் துவங்கினான். வார்த்தைகள் மட மடவென்று வந்தன. அவனுக்கு ஒரு அறிவு ஜீவியாகி விட்டதுபோல் ஒரு ஆனந்தம், கவிதா, மோவாயில் கை வைத்து அவனைப் பார்த்து வியக்கப் போகிறாள் என்ற கற்பனையில், வகுப்புக்களை கட்டடித்தது கூட அவனுக்கு தவறாய் தோன்றவில்லை. 3. அந்த மெரினா கடற்கரை பூத்துக் குலுங்கியது. ஆண்கள் செடிகளாகவும், பெண்கள் கொடிகளாகவும் பின்னிப் பிணைந்திருந்த பகுதி. இருள்மயமே அவர்களுக்கு ஒளி மயமாக தோன்றிய இடம். என்றாலும், அங்கே சென்ற செல்வாவை கவிதா இழுத்துப் பிடித்துக் கொண்டே, முதலில் உங்க கவிதையை சொல்லுங்க என்று கடற்கரையின் விளிம்புப் பகுதிக்கு வந்து உட்கார்ந்தாள். அவன் கையைப் பிடித்து அவனையும் உட்கார வைத்தாள். அவள் கை வலுவை பார்த்த செல்வா கேட்டான் ஒரு கேள்வி. "நீ என்ன கராத்தே பெண்ணா? உன் பிடி இரும்புப் பிடியாய் இருக்கே? “ஒரு பெண்ணோட கடைக்கண் பார்வையில் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம் என்றார் பாரதிதாசன். இது ஒரு ஆணாதிக்கப் பார்வை. அவரே பெண்ணாக இருந்தால், காதலியின் கைப்பிடியில் காதலனும் ஒர் கடுகா முன்னு பாடியிருப்பார். இப்போ நீங்க என் தோளில கிடக்கிற கையை எடுக்கறீங்க. அதே கையால பைக்குள்ள இருக்கிற கவிதைய எடுத்துப் படிக்கிறீங்க. நிறைய எழுதியிருக்கீங்களோ. உங்க சட்டைப்பை கர்ப்பம் தரிச்ச பெண்ணு மாதிரி துருத்திக்கிட்டு நிற்குது." செல்வா, பெருமிதமாகச் சொன்னான் "இது கவிதைக் கற்பம். இப்போது பிரவசம் நடக்கும் பார்" செல்வா, இலக்கியக் கர்வத்தோடு இரண்டாய மடித்த அந்தத் தாள் கற்றைகளை எடுத்து சத்தம் போட்டே படித்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/148&oldid=762203" இலிருந்து மீள்விக்கப்பட்டது