பக்கம்:ஒத்தை வீடு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 புதைமண் கொள்ளவேண்டியதும், அரக்கப் பரக்கப் பார்க்க வேண்டியதும் தான் பாக்கி அய்யய்யோ! இவரை இனிமேல் கவிதை எழுதவே சொல்லக்கூடாது: கவிதா, அவனது வலது காதை செல்லமாக அல்லாமல், வலிக்கும்படி முறுக்கியபடியே கேட்டாள் "ஒழுங்கா பதில் சொல்லுங்க! இது நீங்க எழுதுன கவிதை இல்ல. இப்போ நீங்க பேசுற பேச்சுக்கு உங்களுக்கு எவனோ பின்னணிக் குரல் கொடுக்கான் கொடுத்தவன் யார் சொல்லுங்க." "நான்தான். நானேதான்." "நம்ப மாட்டேன். நம்பவே மாட்டேன். இந்தக் கவிதை, நம்ம, அந்தரங்கத்தை நீங்க எவன் கிட்டயோ சொல்லி, அவன், உங்க அப்பா எழுதிக் கொடுத்தது மாதிரி, இப்படி எழுதிக் கொடுத்திருக்கிறான். இப்போது உங்கள் காதல்மீதே எனக்குச் சந்தேகம்." கவிதா, அவன் காதை அவனிடமே ஒப்படைத்துவிட்டு, கால்களைத் துக்கி முட்டிகளின் முனையில் முகம் போட்டாள். செல்வா, அவள் முகத்தை நிமிர்த்தப் போனான். அவள் பற்களால் கடிபட்ட கைகளை உதறியபடியே, அவள் முன்னால் எழுந்து, மூன்று முறை தோப்புக் கரணம் போட்டபடியே விளக்கமளித்தான். "என்னை நம்பு கவிதா, நம்ம காதலைப் பற்றி எந்த பயல் கிட்டயும் மூச்சு விடல. கல்லூரி நூலகத்திற்குப் போனேன். அங்கே வந்த எங்க இணை தமிழ்ப் பேராசிரியர்கிட்ட புதுக்கவிதை பற்றி விளக்கம் கேட்டேன். பல இலக்கிய கூட்டங்களுக்கு போனவர் அவர் பல கூட்டங்களில் அடித்துப் பேசுவார். அடிபட்டும் வருவார். இந்தக் கவிதையை அவரிடம் காட்டினேன் இதற்கு ஈடாக இனிமேல்தான் ஒரு கவிதை பிறக்க வேண்டும் என்றார். பச்சையாக சொல்ல்ப்போனால், ஒரு இலக்கிய இதழில் வந்த கவிதையை அப்படியே காப்பி அடித்து கொண்டு வந்தேன்." கவிதா, மீண்டும் அவன் காதைத் திருகியபடியே இன்னொரு கேள்வி கேட்டாள். "இனிமேல் அறிவு ஜீவிகளின் பக்கம் போவீங்களா?" "மாட்டேன். மாட்டவே மாட்டேன்." "சளி போகட்டும். இந்தக் கவிதை மண்ணாங்கட்டி எதுவும் வேணாம் என்னை சந்திப்பதற்கு முன்னால் நீங்க எப்படி இருந்தீங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/150&oldid=762206" இலிருந்து மீள்விக்கப்பட்டது