பக்கம்:ஒத்தை வீடு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 159 மூளைக்கும் இடைப்பட்ட குரல் எதுவாக இருக்குமென்று எண்ணிப் பார்த்தான். மனசாட்சியோ என்னவோ. தன்னை நம்பும் சித்தப்பாவிற்கு துரோகம் இழைப்பது போன்ற நெருடல் மகன் மீது மகத்தான பாசமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் தந்தை முன்னால் வந்து தடுப்பது போல் ஒரு பிரமை. கூடவே சித்திக்காரியின் திட்டுக்கள். என்றாலும், இதுவரை உயிரோடும் படிப்போடும் இருக்கிறான் என்றால் அதற்கு, அந்த வேலைக் காரம்மாவும் இந்த கவிதாவும்தான் காரணங்கள் என்று நினைக்க நினைக்க, அவனது பின்னிய கால்கள் பிரிந்தன. செல்வாவின் மனம் துள்ளியது. மணிக்கணக்கில் பொறுத்த வனால் வினாடிக் கணக்கில்கூட பொறுக்க முடியவில்லை. கம்பெளண்ட் கதவில் ஒன்று திறந்திருந்தது. அக்கம் பக்கம் பார்த்தபடியே உள்ளே ஓடினான் கவிதா, அவனுக்காக முன்வாசல் வளாகத்தில் காத்திருக்காதது லேசாய் வலித்தது. முன்னெச் சரிக்கையாக இருக்கும் என்று அந்த வலியை வருடலாக மாற்றிக் கொண்டான். ஆறு கிரவுண்டுகளை ஆக்கிரமித்த அரண்மனை வீடு. சுவர்களுக்கு நான்கு புறத்திலும் ஒரு பனை உயரத்திற்கான ஏழெட்டு வெண்மையான தூண்கள். இவற்றிற்கு இடையே அலங்கார வளைவுகள். இரண்டு மாடி கட்டிடம் என்றாலும், அது மூன்று மாடியாய் தோன்றியது. பர்மா தேக்குகள் மாதிரி அதேசமயம் நவீனப் பாங்கில் செய்யப்பட்ட கதவு. பழமையும் புதுமையும் இணைந்த அது சொக்கத் தங்க நிறத்தில் மின்னியது. துணுக்கமான நெளிவு சுளிவுகளோடு கோபுரமாய், தேராய், சின்னஞ்சிறு பதுமைகளாய் தோன்றிய அந்த கதவில் வெறுமையான பகுதி என்று எதுவும் காணமுடியாது. கதவு திறந்திருந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால் கவிதாவைக் காணவில்லை. ஒருவேளை சினிமாக் காட்சிகளில் வருவதுபோல் மறைந்திருந்து தாவுவாள் என்று நினைத்துக் கொண்டான். பைக்குள் இருந்த உரைவீச்சை தட்டிக் கொடுத்தான் இதுவரை அதிகமாய் சொல்லாத சுமைகளை கொண்ட அந்தக் கடிதத்தை படித்துவிட்டு, கவிதா அ, மாக அழுதுவிடக்கூடாதே என்ற ஆதங்கம். அதேசமயம் அவள் அழுகைக் கண்ணிரில், தனக்கு ஆனந்தக் கண்ணிர் வரும் என்றும் நினைத்தான். தன்னை நேசிக்கும் ஒருவரிடம் தனது பாரங்களை ஏற்றிவிட்டு ஏற்றப்புட்டவர்களின் பாரங்களை திருப்பி வாங்கிக் கொள்ளும்போது எப்படிப்பட்ட சுகமும், நன்றி உணர்வும், பெருமிதமும் கிடைக்குமோ அப்படிப்பட்டவை அவனுக்குக் கிடைத்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/159&oldid=762215" இலிருந்து மீள்விக்கப்பட்டது