பக்கம்:ஒத்தை வீடு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 161 செல்வாவிற்கு கோபமும் வந்தது. ரோசமும் வந்தது. அவன் சித்தப்பா நேர்மையானவர். கடனே என்று கட்டிய வீடு. அதாவது அரசாங்கக் கடனில் கட்டிய வீடு. சித்தியின் நகைகளை அடகு வைத்து சுமாராக கட்டப்பட்ட அந்த வீட்டை, இவன் கிச்சன் வீடு என்று சொன்னது என்னவோ போல் இருந்தது. இவன் அப்பன் ஐ.ஏ.எஸ். காரனைப் போல் கொள்ளையடித்துக் கட்டிய வீடல்ல. இப்படி சொல்லி விடலாமா என்று கூட அவன் நினைத்தான். உடனே காரியம் பெரிதா. வீரியம் பெரிதா என்ற கிராமத்துப் பழமொழி அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதோடு இவன், அவன் உயிருக்குயிரான கவிதாவின் அண்ணன் தமாஷ் பேர்வழி, மனதில் எந்த விகற்பமும் இல்லாமல் அப்படி கேட்டிருப்பான். "ஏன் யோசிக்கிறே? பதில் சொல்லு?" "ஆமாம் ஸ்ார். அது எங்க சித்தப்பா வீடு, ரொம்ப ரொம்ப நேர்மையானவர். அவரால கிச்சன் வீடுதான் கட்ட முடியும். நான், அவரோட அண்ணன் மகன். கிராமத்துல அப்பாம்மா இருக்காங்க. நான் இங்கே சித்தப்பா வீட்ல தங்கி காலேஜ் படிக்கிறேன். "ஒன்னைப் பார்த்தால், படித்தவன் மாதிரி தெரியலியே? "நோ. நோ. சார். நான் பி.எஸ்.ஸி. பிசிக்ஸ் ஸ்ார். கிளாஸ்ல பஸ்டு ஸார். பல கல்லூரிப் பேச்சுப் போட்டிகள்ல பஸ்ட்ல வந்திருக்கேன் ஸார்." "குட். அப்படித்தான் இருக்கணும். ஆனா டிரெஸ்லேயும் கவனம் செலுத்தணும். நான் ஒரு ஐ ஏ.எஸ். ஆபீசர் மகனாய் பிறந்தாலும், பத்தாவது வகுப்புக்கு மேல புத்தி போகல. ஆனாலும் எவ்வளவு ஸ்டைலாக இருக்கேன் பார். ஒன் நன்மைக்காகத்தான் நான் சொன்னேன். தப்பா பேசியிருந்தால் மன்னிச்சுடு." "மன்னிக்கும்படியாய் நீங்க எதுவும் பேசல ஸார். உங்கள ரெண்டு மூணு தடவதான் பார்த்திருக்கேன். நீங்க விதிவிலக்கான இளைஞராம். டான்ஸ் மாஸ்டராம். ஸ்டண்ட் பயிற்சியாளராம். டி.வி.யில நிகழ்ச்சிகளுல அந்தர் பல்டி அடிச்சுக்கிட்டே பாடுவீங்களாம். ஆக மொத்தத்துல சகலகலா வல்லவராம். ஆனாலும், ஐ.ஏ.எஸ். அப்பாக்கூட மட்டும் ஒத்துப் போனால் எங்கேயோ போயிருப்பீங்களாம். இதனால உங்க டேலண்ட் வேஸ்ட் ஆகுதாம்." "இப்படி சொன்னது யார் உனக்கு? "எங்க சித்தி ஸார். உங்க அம்மாவோட பிரண்டு ஸார்." "அப்போ உங்க சித்தியை நான் டாவ் அடிக்கட்டுமா? உட்காருடா. எழுத்துட்டதாலேயே நீ போகமுடியாது. இப்படிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/161&oldid=762218" இலிருந்து மீள்விக்கப்பட்டது