பக்கம்:ஒத்தை வீடு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 185 திட்டுகிறாள். வஞ்சகம் இல்லாமல் எனக்கு உணவளிக்கிறாள். ஆபீசர் சித்தப்பாவிடம் அதிக எதிர்பார்ப்புகளோடு வந்தவளுக்கு, அவரது நேர்மை விலங்கிட்டிருக்குமோ என்று ஐயப்படுகிறேன். சித்தப்பா மீது காட்ட முடியாத கோபத்தை என்மீது காட்டுகிறாளோ என்னவோ. ஆனாலும், சித்தி என்னை திட்டும் போதெல்லாம், நீ அங்கே தோன்றி அவளிடம் எதிர் கேள்வி கேட்டு அடக்குவதுபோல் கற்பித்து கொள்கிறேன். யதார்த்தமான நிசத்திலிருந்து தப்பிக்கத் தோன்றும் முட்டாளின் சொர்க்கம் என்று நினைக்காதே. நீதான் என் சொர்க்கம்." "எதை நீக்க முடியாதோ, அதை சகித்துக் கொள்ள வேண்டும் என்பது ஆங்கிலப் பழமொழி. சித்தியின் ஏச்சான எச்சிக்கல பயலே. வாங்கிக் குடித்த பய மவனே. எறப்பாளி. என்பன போன்ற வார்த்தைகளை நீங்கள் நேர்மையானவர். வெள்ளந்தி. எதிர்கால வி.ஐ.பி. என்று நீ சொல்லும் வார்த்தைகள் சித்தியின் வார்த்தைகளை துரத்தி விடுகின்றன "சித்தியின் ஏச்சை நான் பொறுத்துக் கொள்வதால், நான் சுயமரியதைக்காரன் அல்ல என்று பொருள் அல்ல. என் பெற்றோர், என்னை அப்படியும் வளர்க்கவில்லை. நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம். என் தந்தை, தனது தம்பியான என் சித்தப்பாவை சக்திக்கு மீறி படிக்க வைத்தவர் இதர சித்தப்பாக்கள் அவனை ஏன் படிக்க வைக்க வேண்டும் என்று கேட்டபோது, அவர்களுக்கு வாயால் சூடு போட்டவர். எப்போதுமே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுமாய் ஒரு தூசி தும்பு படாமல் இருப்பவர். விவசாய உழைப்பாளி அல்ல. அதேசமயம் பத்தாயிரம், இருபதாயிரம், ஐம்பதாயிரம் என்று சீட்டுப் போட்டு, அதில் மாதா மாதம் கிடைக்கும் ஏழாயிரம், எட்டாயிரம் ரூபாயை சேமித்து தனது இரண்டு தங்கைகளை கரையேற்றியவர். இதனாலேயே ஊரில அவருக்கு நல்ல பெயர்." "ஆனாலும், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதித் தீ, எங்கள் கிராமத்தையும் பற்றிக் கொண்டது. இந்தச் சாக்கில், சீட்டுப் பணத்தை ஏலத்தில் எடுத்த பிற சாதியினர், மீதி பணத்தை கட்டவில்லை. அப்பாவிடம் சீட்டுக் கட்டியதற்கான எந்தவித ரசீதும் இல்லாததால், அவரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதேபோல், அவரும் ஆதாரம் இல்லை என்ற சாக்கில் சீட்டை ஏலத்தில் எடுக்காதவர்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கலாம். அப்படி அவர் செய்ய மனம் வரவில்லை. சீட்டு கட்டியவர்கள், தத்தம் மகள்களை கரையேற்றுவதற்காக பணம் போட்டவர்கள். இக்கட்டான நிலையில் இருந்த அப்பாவுக்கு, வசதியான கிராமத்து சித்தப்பாக்கள் உதவிக்கு வராமல் தங்களது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/165&oldid=762222" இலிருந்து மீள்விக்கப்பட்டது