பக்கம்:ஒத்தை வீடு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 புதைமண் செல்வா, திகைத்து நின்ற குழந்தைகளின் தோள்களில் கையூன்றியபடியே, படுக்கையில் இருந்து எழுந்தான். பிறகு அப்படியே விழுந்தான். ஒரு சாய்த்து படுத்தான். மீண்டும் அந்த குழந்தைகளை பிடித்துக் கொண்டு ஒப்பாரி குரலில் அழுதான். இதற்குள் சித்திக்காரியும் கூக்குரலோடு வந்தாள். அவள் கை எங்கும் முள் துவாரங்கள். ஒருச் சாய்ந்து கிடந்தவனுக்கு முன்னால் தன் கைகளை நீட்டி நீட்டி பேசினாள். "காபி இல்லாமலும் பண்ணிட்டே கையிலேயும் முள்ள குத்த வச்சுட்டே. கார்டையும் தொலைச்சுட்டே. இப்போ ஒனக்கு திருப்தி தானடா? ஏ! நாய்ங்களா. இன்னிக்கு மட்டும் காப்பி கீப்பி கேட்டிங்கன்னா. தோலை உரிச்சுடுவன். எல்லாம் என் தலைவிதி. வீட்டுக்குள்ள ஆமை வந்தது மாதிரி" செல்வா, தலையை மட்டும் பாம்பு படம் மாதிரி தூக்கிக் கொண்டு பதிலளித்தான். இதுவரை நேருக்கு நேராய் பார்க்க அஞ்சிய சித்தியை, நேரடியாக பார்த்தபடியே பேசினான். "வேணுமுன்னா, என்ன ஒரேயடியா வெட்டிப் போடுங்க சித்தி. ஏற்கெனவே நொந்து போயிருக்கேன். இந்த பிள்ளைகளுக்காக பார்க்கிறேன். இல்லாட்டா இப்பவே இந்த வீட்டை விட்டு ஒடிடுவேன். எல்லாரும் சாகப் போறதே போறம் இடையில எப்படி வாழ்ந்தால் என்ன படிக்காதவன்லாம் வாழாமலா போயிட்டான். ஒடிப் போனவங்களும் உருப்பட்டிருக்காங்க சித்தி. தப்பா பேசியிருந்தால், மன்னிச்சிடுங்க சித்தி. என்ன பேசறதுன்னே எனக்குத் தெரியல..." சித்திக்காரி, வாயடைத்துப் போனாள். அவனுக்குள்ளும் ஒரு மனமும், அந்த மனதிற்குள் ஒரு ரோசமும் இருப்பதை முதல் தடவையாக புரிந்து கொண்டாள். பதில் ஏதும் பேசாமல் அப்படியே சிறிது நேரம் சுய பரிசீலனையில் ஈடுபட்டவள்போல் நின்றாள். அப்போது பார்த்து, மேடம்' என்ற குரல். சித்திக்கு அடையாளம் காண முடியாத குரல். ஆனால், செல்வாவிற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பரிட்சயப்பட்ட குரல். சித்தி வெளியே வந்தாள். வந்தவனைப் பார்த்ததும் "உட்காருங்க ஸ்ார். உட்காருங்க ஸார்..” என்று பரபரப்பான குரலோடு பேசினாள். அங்குமிங்குமாய் அலை மோதினாள். செல்வா, துள்ளிக் குதித்து, வாசல் பக்கமாய் நின்று கொண்டான். காட்டுமிராண்டிப் பயல், 'உன் சித்தியை டாவடிக்கட்டுமா என்று தன்னிடமே கேட்ட பயல். கெட்ட பயல். என்ன ஆனாலும் சரி. அவனை ஒரே வெட்டாய் வெட்டி சித்தியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/172&oldid=762230" இலிருந்து மீள்விக்கப்பட்டது