பக்கம்:ஒத்தை வீடு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 177 "ஆயிரந்தான் இருந்தாலும் அவர் ஒன்னை பெத்தவரு. அவன் இவன்னு பேசப்படாது. டேய் செல்வா! காருல ஏறுடா . சித்தப்பாவுக்கும், கொஞ்சம் ஆபிஸுல வேலை காத்திருக்கு" இயக்குநர் இருக்கையில் மோகனனையும், அதே மாதிரியான இடதுபக்க முன்னிருக்கையில் செல்வாவையும் சுமந்து கொண்டு, அந்தப் கார் பறந்தது. மென்மையான ஏ.சி. குளியல், அது உடம்பு முழுவதும் குவிந்த சுகம் உள்ளே இருந்து பார்த்தால் வெளியே தெரியப்படுத்தியும், வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்களை காட்டாததுமான பச்சைக் கண்ணாடி கண்ணாடியின் அருகே செஞ்சதுரமாய் இருந்த ஒரு சின்ன பெட்டியிலிருந்து மல்லிகை செண்டு, ஏ.சி. காற்றோடு கலந்து முகத்திற்கும் மனதிற்கும் மோகனத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. செல்வா, தலைக்கு மேல் சாணும் முழமுமாய் போன விரக்தியில், எடுத்த எடுப்பிலேயே திட்ட வட்டமாகக் கேட்டான். "என்னை என்ன செய்யப் போறடா பாவி?” "சத்தியமாய் என்னை நம்பு, மறப்பாய் மன்னிப்பாய்ன்னு ஒன்கிட்ட மன்னிப்பு கேட்கிறதுக்குத்தான் ஒன்னை காரில் ஏற்றியிருக்கிறேன். உன்னிடம் நான் நடந்து கொண்டது காட்டு மிராண்டித்தனம்தான். உன்னை நான் மிஸ் யூஸ் செய்தது தப்புத்தான்." "நீ செய்தது மிஸ் யூஸ் இல்ல. அபியூஸ்” "இந்த ரெண்டு வார்த்தைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கிற அளவுக்கு நான் படித்தவனில்ல. எல்லாம் வெளி வேடந்தான். நீ என் தங்கையை கட்டிக்கப் போற மைத்துனன் என் தங்கை மீது எவ்வளவு வாஞ்சை இருக்குதோ, அவ்வளவு வாஞ்சை உன்கிட்டயும் எனக்கு இருக்குது. நீ என்னை மாதிரி ஆயிடக்கூடாது என்கிறதுல நான் கறாரா இருக்கேன். தங்கைக்கு உதவாக் கரையா போன நான், அவளுக்கு உன்னையும் உதவாக் கரையாய் போக விடமாட்டே ன இது சத்தியம்." "இதை நிரூபித்துக் காட்டுறதுக்கு கவிதாவுக்கு நான் எழுதுன லெட்டரை இப்பவே என்கிட்ட தா" “ஐ எம் ஸாரி பிரதர் இன் லா வீட்ல, என் நெம்பர் லாக் சூட்கேஸ்ல வைத்திருக்கேன். சத்தியமா. நிச்சயமா. உண்மையாய். உறுதியாய். தந்துடுறேன். நான் ஒரு ஹோமாசெக்ஸ்காரன்தான் அதுவும் குடும்பச் சூழலில், என் கதையை உன்கிட்ட சொல்லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/177&oldid=762235" இலிருந்து மீள்விக்கப்பட்டது