பக்கம்:ஒத்தை வீடு.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 179 "பெற்ற தாயை இப்படியா பேசுறது? தாய்கிட்ட அன்பு செலுத்தாத எவனும், வேறு யார் கிட்டயும் அன்பு காட்ட முடியாது அதனாலதான் ஒனக்கு நான் பலியாயிட்டேன்." "நான் தான் ஸாரி சொல்லிட்டேனே. பிரதர் இன் லா. அந்த மேனா மினுக்கி எங்கம்மாவே இல்ல. டுப்ளிகேட் அம்மா." "அய்யய்யோ" "என்னைப் பெற்றவள் இன்னொருத்தனோட இருக்காள்:” "அடக் கடவுளே" "முழுசாக் கேள். இந்த பெரிய மனுஷன் வேணுகோபால் ஐ.ஏ.எஸ். இருக்கானே, அவனோட மகனான நான், ஏ.சி. கார்லேயே கான்வெட்டுக்கு போய்கிட்டு இருந்தேன். பரத நாட்டியத்துல இவன்தான் சேர்த்தான். அந்த சாக்குல நான் கதக், ஒடிசி போன்ற நம் நாட்டு நாட்டியங்களையும், வெஸ்டன் டான்ஸ்களையும் கத்துக்கிட்டேன் இங்கிலீஷ் பேச்சுப் போட்டியிலயும், கட்டுரைப் போட்டியிலயும் முதலாவது வந்தேன். பதினாலு வயசிலேயே முதலமைச்சர் தலைமையில என் பரதநாட்டியம் அரங்கேறியது. அதை செய்தியாய் போடாத பத்திரிகை இல்லை. டி.வி. இல்லை. விமர்சனம் செய்யாத இதழ்கள் இல்லை." "எங்கம்மா என்கிறவள் ரெண்டு பிள்ளை பெற்றாள். எனக்கு பதினாலு வயசுல, எங்க வீட்டு மாடியில ஒரு சினிமாக்காரன் குடி வந்தான். கட்டுன பெண்டாட்டிய விட்டுட்டு இன்னொருத்தியோட வாழ்ந்துகிட்டு இருந்தான். இது தெரிஞ்சும், எங்கப்பன் பணத்துக்கு ஆசைப்பட்டு அவனுக்கும், அவன் கள்ளக் குடும்பத்துக்கும் வீட்ட வாடகைக்கு விட்டான் அம்மா என்கிறவள் நாட்டுப்புறப் பாடல்ல கெட்டிக்காரி. எங்கப்பனோ பொம்பள பொறுக்கி. அதனால மனைவியோட டேலண்ட அமுக்கி வச்சான். நான் அவளுக்கும் நியாயம் வழங்கனும் பாரு, அதனால சொல்றேன். எப்படியோ மாடியிலிருந்த சினிமாக்காரனுக்கும் எங்கம்மாவுக்கும் தொடர்பு உண்டாயிட்டு. ஒருநாள் ரெண்டு பேரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிட்டாங்க." "அந்த சினிமாக்காரனோட கீப்பு நேரா எங்கப்பன்கிட்ட வந்திருக்காள். ஒங்க பெண்டாட்டி ஒங்கள விட்டு ஒடிட்டாள். என்கூட வாழ்ந்தவன் என்னை விட்டுட்டு ஒடிட்டான். அதனால நாம ரெண்டு பேரும், ஏன் ஒன்றாய் சேரக்கூடாதுன்னு வாதிட்டிருக்காள். அவளும் கிளாஸ் ஒன் ஆபீசர். அதாவது பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/179&oldid=762237" இலிருந்து மீள்விக்கப்பட்டது