பக்கம்:ஒத்தை வீடு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 17 “ஒனக்கு மூளை இருக்குதாம்மா...? தம்பி வந்ததும் வராததுமாய்." மனோகர், அக்காவையே பார்த்தான். பார்க்கப் பார்க்க எரிச்சலும், பாசமும் மாறி மாறி வந்தன. உச்சிமுதல் பாதம் வரை சமச் சீரான உடம்பு. பச்சைக் கருப்பு. பச்சையான கருப்பல்ல. பாசிப் பச்சையும், நீலக் கருப்பும் கலந்து குழைந்த வாளிப்பான நிறம். எலும்புகள் தேக்காகவும், தரம்புகள் பித்தளை ஒயர்களாகவும், சதைகள் செப்புக் கட்டிகளாகவும் உருவெடுத்து, எஃகு போன்ற தோலுக்குள் அடங்கியது போன்ற மல்லுடம்பு. மனோகர், எதுவும் பேசாமல் உள்ளே வந்தான். முற்றத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து பின்பக்கமாய்ச் சாய்ந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அக்கா கொண்டு வந்த ஒரு செம்புத் தண்ணிரை துக்கிப்பிடித்து, நீரை அருவியாகவும், வாயைப் பள்ளத்தாக்காகவும் ஆக்கிக் கொண்டிருந்த போது, சொர்ணம்மா சொன்னதையே மாற்றிச் சொன்னாள். "பட்டா நிலத்துல வண்டிப் பாதை போடுறத்துக்கு, எங்கப்பனுக்கு பிறந்தானுவளா? இல்லை ஒன் மச்சானுக்குப் பிறந்தானுவளா. எவ்வளவு கொழுப்பு இருந்தால், அடுத்தவன் நிலத்தை வாயில போடுவானவ? அவனுவ துள்ளத் துடிக்கப் போவனும் கொள்ளி போட பிள்ளை இல்லாமல் போகிற இடத்துல சாகனும், வாந்தி பேதில போகணும். மனோகர்; இத விடப்படாது.டா. இப்பவே போன் போட்டு, அவங்க கையில காலுல விலங்கு மாட்டி போலீஸ்காரன் அவனுவள நடு ரோட்ல நாய இழுத்துட்டுப் போற மாதிரி போக வைக்கனும், யாரை விட்டாலும் அந்த ராமசாமியை மட்டும் விடப்படாது. கொள்ளையிலே போவான்." மனோகர் பாதிச் செம்புத் தண்ணிரைத் தரையில் வீசியபடியே, புரையேறிய தலையோடு சீறினான். "கம்மா கிடம்மா.. எக்கா. ஆறு மாதத்துக்கு முன்னாலதான் இதே மாதிரி பிரச்சினையில தலையிட்டு, ராமசாமி வகை யறாக்களை உள்ளே போட்டோம். போலீஸ் என்னதான் தெரிஞ்சவங்களா இருந்தாலும், ஒரு தடவதான் சொல்லலாம். அடுத்த தடவ சொன்னால். நமக்குத்தான் அசிங்கம்." அக்கா, காந்தாமணி, அசைவற்று பேசாமல் நின்றபோது, தாய்க்காரி மகளுக்கும் சேர்த்துப் பேசினாள். "இந்தப் பாவி மொட்டக்கிட்ட, காலையிலேயே படிச்சுப் படிச்சுச் சொன்னேன். ஒன் தம்பியை நம்பாதே நம்பாதேன்னு தலையில அடிக்காத குறையாச் சொன்னேன். அவன் பழைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/18&oldid=762238" இலிருந்து மீள்விக்கப்பட்டது