பக்கம்:ஒத்தை வீடு.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 புதைமன் மேடையில் பாட்டிற்கேற்ப கொஞ்சுக் குலாவினார்கள். இதற்குள் துணைச் செயலாளனின் மோவாய் அசைப்பில் ஒருத்தன் தட்டு நிறைய பிரியாணியோடு செல்வாவிடம் போனான். 'உன்னை எதுவும் செய்ய மாட்டோம். பேசாம சாப்பிடு என்றான். இரண்டு நாள் முழுக்க பட்டினி கிடந்த செல்வா, அந்த தட்டை பாய்ந்து பிடிக்கப் போனான் உடனே தட்டுக்காரன் மொதல்ல வயித்துக்குள்ள கனமான சாப்பாட்ட திணிக்கும் முன்னால, பழரசம், சூப் எதையவாது குடிக்கனும், உனக்கு என்ன வேணும் என்றான். பசி வேகத்தில் செல்வா, இரண்டும் என்றான். உடனே, தட்டுக்காரன் செல்வாவை கவனித்துக் கொண்டிருந்த முரட்டுத் தோற்றக்காரணை பார்த்து கண்ணடிக்க அவன் சூப்போடும், பழரசத்தோடும் வந்தான். செல்வா, மாங்கு மாங்கு என்று குடித்தான். பிரியாணியில் மூன்று கவளங்களை போட்டிருப்பான். மீண்டும் ஜூஸ், சூப் என்றான். கேட்டது கிடைத்தது. கிடைக்கக் கிடைக்க அவன் தலை சுற்றியது. சிறிது நேரத்திற்குள் செல்வா, இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடைவெளி கொடுக்கும் சுரணையற்ற திலைக்கு போய்விட்டான். கண் முன்னாலேயே கலர் கலராய் பல்வேறு விதமான படங்கள். யதார்த்தம் - மாந்தரீக இயல்பானது. தலை சுழன்றது. கண்கள் வெட்ட வெளியாயின. அப்படியே தரையில் சாயப் போனவனை, துணைச் செயலாளன் சாய்த்துப் பிடித்து தரையில் குப்புறக் கிடத்தினான். பேண்டை உருவினான். ஜட்டியை கழட்டினான். கின்னஸ் புத்தகத்தில்:இடம் பெறப்போகும் சாதனையாளன் போல் மேடைக்குப் போய், மிஸ்டர் ஜான் ஜோவை கூட்டி வந்தான். அவரும் ஜட்டி போடாத பேண்டை கழட்டி தோளில் துண்டு மாதிரி போட்டுக் கொண்டு, கையிலிருந்த கோப்பையை ஒரே மடக்காய் வாயில் கவிழ்த்துவிட்டு ஓடோடி வந்தார். இதற்குள் அத்தனை பேரும் அம்மணமாக ஆங்காங்கே சுருண்டார்கள். உலக நிறுவன இயக்குநர், செல்வா மீது கவிழ்ந்து படுத்தார். பத்து நிமிடம் ஆகியிருக்கும். கால நேர வர்த்தமானங்களைத் தாண்டிய முப்பரிமாண நிலை. அரை மணிநேரமோ கால் மணி நேரமோ லேசாய் கண் விழித்த செல்வாவிற்கு, பாதி உண்மையாகவும், மீதி கற்பனை போலவும் தோன்றியது. ஆனாலும், தன் மேல் ஒரு சுமையை உணர்ந்தான். உடனே அவனுள் ஒரு வெறி.பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற வெறி. மிஸ்டர் ஜான் ஜோவை, ஒரே உதறலாய் கீழே தள்ளி, குப்புறப் போட்டு அவர்மீது கவிழ்ந்தான். அவரை ஒரு பெண்ணாக நினைத்துக் கொண்டான். கிராமத்தில் ஆட்டை மரத்தில் கட்டி கிடாயை ஏவி விடுவதும், காளை மாடு பசுவின் மேல் கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/188&oldid=762247" இலிருந்து மீள்விக்கப்பட்டது