பக்கம்:ஒத்தை வீடு.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 புதைமண் வந்து எப்படி மன்னிப்பு கேட்பது என்று மனதில் ஒத்திகையாக பேசிக் கொண்டார். அந்தக் கார் போய்க் கொண்டிருக்கும்போதே, செல்வா, வீட்டிற்குள் போனான். அவனை துரத்துவது போல் பின்னால் ஓடிவந்த சித்தி, காட்டுக் கத்தலாய் கத்தினாள். 'இப்போ ஒனக்கு திருப்திதானே? நீயுன்னுகூட அதிர்ந்து பேசாத மனுஷரை ஒரு அந்நியன் முன்னால திட்ட வச்சுட்டே. இதனோடயாவது நிற்பியா? இல்ல, இன்னும் திட்டு வாங்கிக் கொடுப்பியா? செல்வா, சித்தி சொல் கேட்காவதன் போல் தனது அறைக்குள் போனான். அன்று தனது அறையாக தெரிந்த அந்த இடம், இப்போது பிள்ளைகளின் அறையாய் தோன்றியது. எவ்வளவு திமிர் இருந்தால் தப்புத்தான் சித்தின்னு சொல்லாமே போவே. எல்லாம் என் தலைவிதி' என்று அவள் தலையில் அடிக்காமலே கத்தியபோது, அந்த அறைக்கதவு தாளிட்டுக் கொண்டது. இது சித்தியின் கோபத்தைக் கூட்டியது. 'என் வீட்ல இருந்துக்கிட்டே என் ரூமையே பூட்டுறியா? கதவைத் திறடா களவாணிப் பயலே. என்று அவள் கதவை டாம் டூம் என்று கையால் இடித்தாள். காலால் உதைத்தாள். அந்தக் கதவு, தட்டியும் திறக்கப்படவில்லை. செல்வா, கதவு தட்டலோ-சித்தியின் ஏச்சோ எதுவும் கேட்காமல், கண் திறந்திருந்தும் பார்க்க முடியாமல், காது மடல் விரிந்தும் கேட்க முடியாமல் கிடந்தான். ஒரு ஆற்றின் மணல் மேல் குறுக்காய் நடப்பவர்களை திடீர் வெள்ளம் அடித்துச் செல்வது போல், இக்கட்டான - அதேசமயம், யதார்த்தமான வாழ்க்கை மண்ணில் நடந்தவனை, அனுபவ வெள்ளம் விழுங்காமல் விழுங்க வைத்ததை நினைத்து பிரமித்துக் கிடந்தான். உள்ளுருப்புகள் மட்டுமே இயங்க, வெளி உறுப்புகள் சூனியமாக, மல்லாக்கக் கிடந்தான். சித்திக்காரிக்கு கை வலியும், வாய் வலியும் ஏற்பட்டு கதவுச் சத்தம் ஒய்ந்த பிறகுதான், அவனுக்கு பிரக்ஞை ஏற்பட்டது. கூடவே அது பல்வேறு விபரீதங்களை கற்பித்துக் கொண்டது அந்த ஓரின ஆடுதளத்தில் சில சிறுவர்கள் வாய் கவ்வி கிடந்தது நினைவுக்கு வந்தது. அந்த நினைவு சித்தப்பா பிள்ளை அருணை, இந்த மோகனன் சில்மிஷம் செய்வானோ என்று எண்ண வைத்தது. அந்த எண்ணம் சுய அனுதாபத்தில் கரைய வைத்தது. காரில் சித்தப்பா இருக்கிறார் என்ற வடிகால் கிடைத்தது. அந்த வடிகாலில் சித்தப்பாவும் மூழ்கிப் போவாரோ என்ற பயம் பிடித்தது அதுவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/194&oldid=762254" இலிருந்து மீள்விக்கப்பட்டது