பக்கம்:ஒத்தை வீடு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 197 வார்த்தைக்கு வார்த்தை அண்ணா. அண்ணா. என்று செல்லம் கொஞ்சும் குழந்தைகள், இப்போது "எம்மா.. எம்மா." என்று ஒருமித்துக் கத்தியபடியே தரையில் புரண்டார்கள். அவனோ, அதைப் பற்றி பொருட்படுத்தாமல், நடையை தொடர்ந்தான். எதிர்த் திசையில் என்னமோ ஏதோ என்று ஓடிவந்த சித்தியை முட்டாக் குறையாக உராய்ந்தபடி, வாசலைத் தாண்டினான். தாவித் தாவி, பாய்ந்து பாய்ந்து ஓடினான். பூட்டாமல் ஒட்டிக் கிடந்த இரும்புக் கிராதி கதவுகளை, இரண்டாகப் பிளந்து அந்த பிளவிற்குள் பாய்ந்து, மலைப்படிகள் மாதிரியான வீட்டுப் படிகளில் ஏறி, வராண்டாவ்ை தாண்டி, வரவேற்பு அறையில் குதித்து, மோகனனின் அறை வாசலில் பாதி வழி மறித்துக் கிடந்த கதவை, பிய்த்து விடுவதுபோல் ஒருச்சாய்த்து தள்ளியபடியே, உள்ளே பாய்ந்த செல்வா, பிரமித்தபடியே நின்றான். உதடுகள் ஒட்டாமல், விழிகள் கொட்டாமல், அப்படியே நின்றான். அந்த அறையின் கிழக்குச் சுவரில் தேர் வேலைப்பாடுகளைப் போன்ற ஆறடி உயர பீரோ பலகைகள். இவற்றை குறுக்காய் இணைக்கும் மூன்றடி அகல கருஞ் சிவப்பு பலகைகள். இவற்றில் மத்தியில் ஒரு செவ்வக வடிவம். ரேடியோ சி.டி., டேப் ஆகிய மூன்றையும் கொண்ட இசைக்கருவி. இந்த குறுக்குச் சட்டத்திற்கு மேலேயும் கீழேயும் பல்வேறு வகையான இசைக் கருவிகள். சி.டி.யில் ஒரு ப்ாடல். சந்த நயம் கொண்ட வேக வேகமான சொல்லடுக்குகளை கொண்ட ஊழிக்கூத்து பாடல். மோகனன், கால் சலங்கையும், கை மணியுமாய் தாமரைப் பூ போல் விரிந்த தார் பாய்த்த எட்டு முழ தும்பை வேட்டியுடன், இடுப்புக்கு மேலே எதுவும் இல்லாத விரிந்த மார்பும், பரந்த தோளுமாய் ஆடிக் கொண்டிருந்தான். சிவபெருமானின் ஊழிக்கூத்தின் அனந்தங்கோடி பிரமான திரளாய் ஆடினான். ஊழித் தர்ண்டவம், காலும் கையும் உரசிக் கொள்கின்றன. உச்சியும் பாதமும் ஒட்டிக் கொள்கின்றன. தலை பம்பரமாய் சுழல்கிறது. பிறகு உடலோடு சேர்ந்து அங்குமிங்குமாய் தாவித் தாவி அந்த அறையே ஒரு பிரபஞ்ச கண்ணாடி ஆகிறது. அங்குமிங்குமாய் சுழல்கிறான். ஒரு கை உடுக்கை போல் ஆகிறது. இன்னொரு கையால் அதை அடித்துக் கொள்கிறான். பின்னர் ஒவ்வொரு கையும், ஒவ்வொரு காலோடு பின்னிக் கொள்கின்றன. அந்த பின்னலிலும் ஒரு மாற்றம். வலது கையும் வலது காலும் பிரிந்து இடது கையும் இடது காலோடும் ஜோடி சேர்கின்றன. இடது காலும் இடது கையும் பிரிந்து வலது கையுடன் இணைகின்றன. ஒற்றைக்கால் உயர்கிறது. மற்றக்கால் துள்ளுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/197&oldid=762257" இலிருந்து மீள்விக்கப்பட்டது