208 புதைமண் அரைமணி நேரத்திற்குள், அவள் முகத்தில் ஒரு புன்னகை. அவன் ஆடை அலங்காரத்தோடு எதிரே வந்து கொண்டிருந்தான். கவிதா, அக்கம் பக்கம் பார்க்காமலே ஒடினாள். அவனை நோக்கி பறப்பதுபோல் கைகளை ரெக்கையாக்கிக் கொண்டாள். ஒரே நிமிடம். அவள் முகம், அமாவாசையாகியது. கூனிக்குறுகிப் போனாள். தலை தானாக கவிழ்ந்தது. செல்வா, அவளைப் பார்த்து திடுக்கிட்டு, ஒற்றைக் காலில் நின்றான். மோகனனின் பாணியில் அதே ஒற்றைக் காலை திருப்பி, வீட்டின் வெளி வாசல் கதவை மோதி, தன் வீட்டிற்குள் மறைந்து விட்டான். கவிதாவுக்கும், சுயமரியாதை கோபமானது. அந்த சுயத்தில், அவளுக்கு, அவள் கொண்ட காதலை தொடரவேண்டும் என்பதைவிட, அவனது பாரா முகத்திற்கு காரணம் கண்டு பிடிக்கவேண்டும் என்ற வேகம் ஏற்பட்டது. சொந்த அம்மாவே தன்னை எப்போது தொலைத்தாளோ, அப்போதே, எல்லோருடைய புறக்கணிப்பிற்கும் ஆயத்தமாக வேண்டுமென்று அடிக்கடி தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறவள். அவன் செய்த காரியத்தைவிட, அதற்கான காரணமே முக்கியமாய் பட்டது. ஏதோ வெறி உந்த, அவன் போன வீட்டிற்குள்ளேயே போனாள். சித்தி எதிர்பட்டால் அதற்குரிய காரணத்தை சொல்வதற்கும் ரெடியாகி விட்டாள். செல்வா, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து ஒரு நாட்டியத்தை தொலைக்காட்சியில் பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த பரவசத்திற்குரியவன், அந்த தொலைக் காட்சி நிகழ்ச்சியில், ஏற்கெனவே நாட்டியப் பதிவு செய்த அவள் அண்ணன் மோகனன். பம்பாய்க்கு திரும்பாப் பயணமாக போவதாய் அவள் பெயருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு போய்விட்டான். உன் உறவு தொடரட்டும் என்றும் அந்த கடித்த்தில் குறிப்பிட்டிருந்தான். அண்ணனாகிய தன்னை அவள் புறக்கணித்து விடக்கூடாதே என்று அர்த்தத்தில், அப்படி அவன் எழுதியதாக, இவள் அர்த்தப்படுத்திக் கொண்டாள். கவிதா, இருமினாள்; செருமினாள் பின்னர், அந்த வீடு முழுவதையும் திருட்டுத் தனமாக பார்த்தபடியே, அவன் முடியை பிடித்து இழுத்தாள். செல்வாவின் முகம் மேல்நோக்கித் திரும்பியது. அவளைப் பார்த்ததும், அதே முகம், கால் கைகளை இழுத்துப் பிடித்து தரையில் நேராக நிறுத்தியது. வலது கை ரிமோட் கட்டுப்பாட்டு கருவியின் சிவப்பு பித்தானை அழுத்தியது கலர் கலரான அந்த வண்ணப் பெட்டி வெறுமையானது. செல்வா, அவளை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, அந்த அறையின் குறுக்கு வெட்டை நீளவாக்கில் நடந்து அறைக்கதவை
பக்கம்:ஒத்தை வீடு.pdf/208
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
