பக்கம்:ஒத்தை வீடு.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 புதைமண் செல்வாவிற்கும் ஒரு சுக உணர்வு. பசு மாட்டின் மேலிருந்தபடி, அதன் உண்ணிகளை கொத்தித் தின்னும் காகங்கள், அந்த மாட்டிற்கு கொடுப்பது போன்ற சுகம். ஆனாலும், மரக்கட்டையாய் கிடந்தான். உடல் இயங்கவில்லையானாலும், மனமும் மூளையும் ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டன இருபக்கமும் அடிபட்டு, மனச்சாட்சி மெளனச் சாட்சியானது. நேற்று, கவிதாவிடம் அவன் நடந்து கொண்ட முறை காட்டுமிராண்டித்தனம் என்பது அவனுக்கே தெரியும். ஆனால், அவனது, காட்டுமிராண்டியான, செல்லத்தனமான மோகனனை, அவனால் மறக்க முடியவில்லை. அண்ணன், தங்கை மாறி மாறி வந்தார்கள். முதல் தடவை வாந்தி எடுத்தவனுக்கு, அந்த வாசனை மிக்க டீலக்ஸ் உறை இப்போதும், கிளுகிளுப்பூட்டும் வாசனையாக வந்தது. உடலெங்கும், உடலை லேசாக்குகிறது. அதோடு, தான் பயன்படுத்திய அந்த செண்பக வாசனை டீலக்ஸையும் நினைத்துக் கொண்டான் தன்னைவிட உருவத்திலும், வயதிலும் பெரிய மோகனனை, பாசிவ் பார்ட்னராக - சும்மா கிடக்கும் பங்காளியாக ஆக்கிக் காட்டியதில் அவனுக்கு வெற்றிப் பெருமிதம்கூட ஏற்பட்டது. தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மையாகியது. அவனுக்கு கிடைத்த ஆண்சுகம், பெண்சுகம் போலவே தோன்றியது. தன்னுள் துடித்த ஏதோ ஒன்றிற்கு வடிகால் கிடைத்த ஒரு ஆனந்த அனுபவம். அதேசமயம், மோகனனை, இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஒரு பரிதவிப்பு. அவனை அப்போதே பார்க்கத் துடித்தான். அவன் கூட்டிச் சென்ற கிளப்பிற்கு போய், அவனது பம்பாய் முகவரியை வாங்கிக் கொண்டு தானும் பம்பாய்க்கு போய்விடலாமா என்ற சிந்தனை ஆனாலும், அந்த கற்பனையான பயணத்தை, கவிதா மானசீகமாக வழி மறித்தாள். டுப்ளிகேட் அம்மாவுடன் வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ள பாவப்பட்ட பெண்தான். ஆனாலும், பழிகாரி. அந்த அம்மா விசயத்தை, முன்பே அவனிடம் சொல்லி இருக்கலாம். எனினும், சுயமரியாதை விட்டுக் கொடுத்து, வீடு தேடி வந்தாள். அவள் விளக்கமளிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாம். ஆனால், நட்பாகத்தான் கொடுக்க முடியும். காதலாக கொடுக்க முடியாது. செல்வாவின் மனதிலிருந்து, அந்த மோகனன், அவளைத் துரத்திவிட்டு, தான் மட்டுமே தன்னந் தனியாய், தக்காரும் மிக்காரும் இல்லாமல் காலூன்றிவிட்டான் அவன் நாட்டியத்திற்கு முன், இவள் நடை நொண்டியடிக்கிறது. அவன், கிறங்க வைக்கும் பார்வையில், இவள் பார்வை மங்கிப் போகிறது. அவன் மரகதப் பச்சை டையில், இவள் கழுத்துச் சங்கிலி, அந்த கழுத்தை சுற்றிய நாகம்போல் தோன்றுகிறது. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/210&oldid=762272" இலிருந்து மீள்விக்கப்பட்டது