பக்கம்:ஒத்தை வீடு.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 2群影 பிடித்துக்கொண்டு நின்றனர். "இனிமேல் அண்ணாகிட்ட இருக்க மாட்டேம் டாடி.." என்றான் அருண். சுபேதா, அவன் பேச்சுக்கு வக்காலத்து வாங்குவதுபோல், அப்பாவின் கையை விட்டுவிட்டு, அருணின் கையை பிடித்தாள். அண்ணன் மகனை, புனல் ததும்பப் பார்க்கும் சித்தப்பா, இப்போது கனல் கக்கப் பார்த்தார் குழந்தைகளை, அவன் அடிப்பதாக, தன்னிடம் குற்றஞ்சாட்டிய மனைவியிடம் அடிக்கிற கைதான் அணைக்கும் என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியவர், இப்போது அதிர்ந்து போய் நின்றார் அப்போதே நேர்கோட்டுச் சிந்தனையில் இருந்து விலகி, பக்கவாட்டில் சிந்தித்தார். "உங்க அண்ணன் மகனை, நம்ப அம்மா லேசா கஷ்டப்படுத்துறாங்க அய்யா. நான் சொன்னேன்னு சொல்லாம, சாடை மாடையா சொல்லுங்கையா" என்று சொன்ன அதே வேலைக்காரம்மா, நேற்று, "இந்த பிள்ளாண்டான் போக்கும் சரியில்லை அய்யா" என்றாள். அவனுடைய பிரச்சினையை கண்டறிய, அலுவலகம் போகிற வழியில், செல்வா படிக்கும் கல்லூரியிலும் விசாரித்தார். கல்லூரிக்கு அவன் நான்கைந்து நாட்களாக போகவில்லை என்கிற அதிர்ச்சி செய்தி கிடைத்தது. செல்வாவை அழுத்தம் திருத்தமாய் பார்த்தார். அவன் தலை தாழ்த்திவிட்டு, மீண்டும் திமிர்ந்தபோது - "உன்னோட பிரச்சினை என்னடா?” "ஒண்ணுமில்ல சித்தப்பா. நல்லாத்தான் இருக்கேன்" "அதை நான் சொல்லணும். காலேஜ் போறியா?" "போறன் சித்தப்பா, சித்தி புளுகிறாங்க." "பொய் பேசவும், பழி போடவும் கத்துக்கிட்டே!. இன்னும் என்னல்லாம் கத்துக்கிட்டியோ. சொல்லுங்க ஸார். நானே காலேஜ்ல போய் விசாரித்து வந்தேன் ஸார்." செல்வா, தலை கவிழ்ந்தபடியே, தனக்குள்ளேயே முணுமுணுத்தான். பிறகு, அவரது காலில் விழுந்து கதறப் போனான். இதற்குள் சித்தப்பா முந்திக் கொண்டார் "இந்தா பாருடா பளுவிலேயே பெரிய பளு, நன்றிப் பளு. உங்கப்பா. அதான் எங்கண்ணன், காய் கறிகளையும், என்னையும் வண்டியில ஏற்றிக்கிட்டு, புளியரை சந்தைக்கு வண்டி அடிப்பார். ஒரு சந்தர்ப்பத்துல, ஒரு மாடு, தவழ, ஆரம்பிச்சுட்டுது. உடனே, அந்த மாட்டை அவிழ்த்து வண்டியில பின் பக்கமா கட்டிட்டு, இறங்கப் போன என்னையும் இறங்கவிடாமல் தடுத்துட்டு, அந்த மாட்டுக்குப் பதிலாய் ஒரு மாடாய் வண்டி இழுத்தார். எத்தனையோ கஷ்டத்திலயும் என்னை படிக்க வைத்தார் நானும் வட்டியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/213&oldid=762275" இலிருந்து மீள்விக்கப்பட்டது