சு. சமுத்திரம் 219 "கதவு எங்க மூடி இருந்தது? முழுசா திறந்திருந்தது. உள்ளே போனால். உங்கண்ணன், நான் உனக்கு எழுதின லெட்டரை கைப்பற்றிட்டான். கடைசில உங்க அண்ணனுக்கு என்னை கூட்டிக் கொடுத்திட்டியேடி" கவிதா, சுருண்டு விழப்போனாள். அண்ணனைப் பற்றி, பிறர் சொல்லக் கேட்டிருக்கிறாள். என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. அப்படி யூகிக்க யூகிக்க, அவள், ஆலமர விழுதை பிடித்துக்கொண்டே விம்மினாள். அந்த மரத்தின் துணில் குப்புற சாய்ந்தபடியே, ஒப்பாரியாய் ஒப்பித்தாள். "நான் பாவி. படு பாவி. உங்களை இந்த கதிக்கு கொண்டு வந்த, அந்தப் பயலும் ஒரு அண்ணனா? கூடப் பிறந்த தங்கையோட காதலன்னுகூட தெரிஞ்சும், உங்கள விட்டு வைக்கலியா? உடன் பிறந்தே கொல்லும் வியாதியாய் போனானே." "மோகனனை திட்டாத அவரு ரொம்ப ரொம்ப நல்லவரு." கவிதா, செல்வாவை அதிர்ந்து போய், உடல் திருப்பிப் பார்த்தாள். அந்த மரத்தின் துரிலிருந்து கீழ் நோக்கி சரிந்தாள். அவன் பேசியதின் தாத்பரியம் புரியப் புரிய அவளுக்கு, தான் அவனை இழந்ததை விட, அவன் தன்னைத்தானே இழந்ததே பெரிய கொடுமையாக தோன்றியது. இப்போது, அவன் திட்டியதும், முன்பு அவளைப் பார்த்த உடனேயே பின் வாங்கியதும் குறைந்த பட்ச எதிர்வினையாகவே தோன்றியது. அவளுக்கு மூச்சு முட்டியது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுழன்று சுழன்று சுற்றுவது போலானது. நினைத்து நினைத்து, நினைவற்றாள். மனம் சூன்யமானது. உடல் மரக்கட்டையாது. கண்கள் வெளிறிப் போயின. அந்த சுற்றுப்புறச் சூழல் ஒரு மயான காடுபோல தோன்றியது. ஆங்காங்கே நடமாடிய காவலாளிகள் வெட்டியான்கள்போல் பட்டனர். அருகருகே இருந்த ஜோடிகள் மோகினி வடிவங்களாய் தோற்றம் காட்டின. இதற்குள், சுயத்திற்கு வந்த செல்வா, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தான். அவள் அப்படியே அவன் மார்பில் சாயப் போனபோது, அவளை விலக்கி வைத்தவன் போல் ஆலமர அடிமர அடிவாரத்தில் அவளை சாய வைத்துவிட்டு யதார்த்தத்தை சுட்டிக் காட்டினான். "நல்லதோ கெட்டதோ, நடந்தது நடந்துவிட்டது. என் மனசில இருந்த உன்னை, ஒங்கண்ணன் துரத்திட்டான். அவனை நினைக்கும் இந்த மனம், இனிமேல் யாரையும் நினைக்காது இப்போதும் உன்னை நேசிக்கிறேன். காதலியாக அல்ல. பெண்ணாகக்கூட
பக்கம்:ஒத்தை வீடு.pdf/219
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
