பக்கம்:ஒத்தை வீடு.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 221 "ஹலோ. நீங்க மோகனனோட பார்ட்னர் செல்வாதானே? ஐ அம் தாமோதரன். அன்றைக்கு கிளப்ல பார்த்திருப்பீங்களே?" "அதிருக்கட்டும். அந்தப் பையன் யார்?" "இதுவெல்லாம் சொல்லியா தெரியணும். என் பக்கத்து வீட்டு குடிசைப் பையன். அவனுக்கு பிடித்தமான குலோப் ஜாம், கட்லட், சென்னா பூரி - இதுங்கல வாங்கிக் கொடுப்பேன். கை நிறைய காசும் கொடுப்பேன். அவனுக்கு பிடித்ததை நான் கொடுக்குறதால, எனக்கு பிடித்ததை அவனும் செய்யுறான். அவ்வளவுதான்." செல்வா, அந்த சிறுவனை துக்கி நிறுத்தினான். கன்னத்தில் மாறி மாறி அடித்தான். தலையில் கை நிறைய குட்டினான். பிறகு, கத்தினான். "இந்த அயோக்கியன்கிட்ட மாட்டிக்காதடா, பெண்டாளப் பிறந்தவங்கள மாதிரி. இவன் ஆனாளப் பிறந்த அயோக்கியன் திரும்பி பாராமல் வீட்டுக்கு ஒடுடா. முதல்ல ஒன் வீட்டு அட்ரஸை சொல்லு:” "அப்பா பேரு ஜெயபால், மயிலாப்பூர் கபாலித் தோட்டத்துல மூனாவது சந்துல எட்டாம் நம்பர் வீடு' அந்தப் பெரியவர். பெரியவர் என்ன பெரியவர். கிழட்டுப் பயல். அவசர அவசரமாக பேண்ட் பட்டன்களை மூடியபோது, செல்வா, அந்த பையனின் பிடரியில் ஒரு அடி போட்டான். "இனிமேல் இந்த மாதிரி காரியத்துக்கு சம்மதிப்பியா? சம்மதிப்பியா?" என்று கேட்டபடியே அடித்தான். "அடிக்காதண்னா அடிக்காதண்னா மாட்டேன். மாட்டேன். மாட்டவே மாட்டேன்." அந்தச் சிறுவன், பையை உப்ப வைத்த பைவ் ஸ்டார் சாக்லேட்டுகளையும், பூமர் பப்லுகாம்களையும், அந்த கிழவரின் முகத்தில் கல்லெறிவதுபோல் எறிந்தான். பிறகு கைகளே காலாகும்படி, அவற்றை தொங்க போட்டபடியே ஓடினான். ஒடிக்கொண்டே இருந்தான். இன்னும் பிரமிப்பிலிருந்து மீளாத தாமோதரக் கிழவன்மேல், செல்வா பாய்ந்தான். அவரை மல்லாக்கத் தள்ளி வயிற்றில் ஏறிக்கொண்டு முகத்திலும் கழுத்திலும் மார்பிலும் குத்தினான். கால்களால் இரண்டு காதுகளையும் நசுக்கினான். கூப்பாடு போடப்போன அவர் வாயில் மண்ணை அள்ளிப் போட்டு குத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/221&oldid=762284" இலிருந்து மீள்விக்கப்பட்டது