பக்கம்:ஒத்தை வீடு.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 புதைமண் "உண்மையான பெண், ஒருவனை நினைத்தால், அது குரங்குப் பிடிதான் நான் சொல்வது வரைக்கும், உன்னோட தனித்துப் பழகக்கூடாதுன்னுதான் அந்தப் பெண்ணுகிட்ட சொல்லி இருக்கேன்" இப்போது, செல்வாவின் பூட்டிய உதடுகளில், ஒரு கீறல். டாக்டர். சத்தியாவும், காரியத்திற்கு வந்தாள். அவனை, அருகே உள்ள கட்டிலில் படுக்கும்படி சைகை செய்தாள் அந்த சைகையை, அவன் செயலாக்கியதும், அவன் அருகே சென்று, நின்றபடியே பேசினாள். "இப்போ கால், கைகளை விரித்துப் பரப்புங்கள். உச்சி முதல் பாதம் வரை ரிலாக்ஸ் செய்யுங்கள். நான் சொல்லிக் கொடுத்தபடி உங்கள் கவனம், பாதங்களிலிருந்து உச்சிக்கு ஒவ்வொரு உறுப்பையும் மென்ட்ைபடுத்தியே வரட்டும். பிறகு, அதே கவனம் பிடரி வழியாய், முதுகுத் தண்டு மூலமாய், கால் பதங்களுக்கு போகட்டும். உடம்பை அப்படியே மிதக்க விடுங்கள். ஆழ்ந்து மூச்சு விடுங்கள். உள்வாங்கும் மூச்சுக்கு ஒரு நிமிடம் என்றால், வெளிவாங்கும் மூச்சுக்கு இரண்டு நிமிடம் ஆகட்டும். ஆழ்ந்து, வயிற்றை விம்மியும், எக்கியும். ஆமாம். இப்படித்தான். இப்படியேதான் மூச்சு விடவேண்டும். இப்போது 'அஞ்சுவதும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை என்ற இரண்டு வரிகளுக்கு இடையே இருக்கக்கூடிய வட்டத்தை பாருங்கள். அந்த வட்டத்தில் இருக்கும் மையத்தைப் பாருங்கள். அந்த மையத்தை மட்டுமே பாருங்கள்." செல்வா, அவள் சொன்னபடியே செய்தான். கண்ணுக்கு வந்த வரிகள் மறைந்தன. வட்டமடித்த வட்டம் மறைந்தது மையம் மட்டுமே நின்றது. அதுவும் சிறுகச் சிறுக சென்றது அப்படிச் செல்லச் செல்ல, அவன் இறப்பிற்கும் பிறப்பிற்குமான இடைவெளியாய், தூக்கத்திற்கும் கனவிற்குமான எல்லையாய் கண்களை மூடியபடி, அரை மயக்க நிலையில் கிடந்தான். சத்தியாவின் குரல், இசை நிபுண்ர்போல ஏற்ற இறக்கத்தோடு குழைவாகவும், உறுதியாகவும் தோழியாகவும், தாயாகவும் பல்வேறு விதங்களில் ஒலித்தது. "இப்போது உன் ஆழ்மனம் விழிக்கிறது. அந்த மனம் என் வசமாகிறது. என் சத்தத்தைத் தவிர, எந்த சத்தமும் உனக்கு கேட்காது. நான் சொல்லுகிறபடி நீ செய்யப்போறே சரியா?” "சரிதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/232&oldid=762296" இலிருந்து மீள்விக்கப்பட்டது