பக்கம்:ஒத்தை வீடு.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -- - சு சமுத்திரத்தின் கதாபாத்திரங்கள் கற்பனையாகத் தோன்றாமல், "இதோ இவர்தான் அந்த நாவலில் வருகிற அவரா" என்று நாம் அடையாளம் காட்டுகிற அளவுக்கு உயிருள்ளதாக இருக்கும். ஆனால், அந்தப் பாத்திரங்களுக்கு வருகிற பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற எந்த எழுத்தாளரும் சிந்திக்காத அல்லது தொடப் பயந்த ஒரு சமூகப் பிரச்சினையை, தன் கதாபாத்திரங்கள் வழியாக தனக்கே உரித்தான பாணியில் எடுத்துச் சொல்லும்போது, நமக்கு ஏற்படுகிற சிலிர்ப்பும் தாக்கமும் அவரது எழுத்துக்களின் சக்திக்கு ஒர் எடுத்துக்காட்டு. என்னைப் போன்ற மருத்துவர்களெல்லாம் நோயாளிகளிடம் நிறையப் பேசி, ஆலோசனை வழங்கலாம். ஆனால், ஒரு 'புதைமண்" - ஒரு ஒத்தை வீடு' ஏற்படுத்துகிற தாக்கம், ஆயிரம் மருத்துவர்களின் சேவையையும் மிஞ்சி நிற்கும்; உடனடிப் பலனையும் ஏற்படுத்தும். டாக்டர் க. காந்தராஜ், பாலியல் நிபுணர், சென்னை. வெளியீடு: ஏகலைவன் பதிப்பகம் 9, இரண்டாவது குறுக்குத் தெரு, டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர், சென்னை - 600 04 1. - (£) : 49 17594

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/249&oldid=762314" இலிருந்து மீள்விக்கப்பட்டது