பக்கம்:ஒத்தை வீடு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஒத்தை வீடு இதற்குள், மனோகர் முற்றத்துக்கு வந்துவிட்டான். பேண்டும் சட்டையுமாய் நடந்தான் மண்மேட்டில் கிடந்த சங்கரி, அந்தப் பக்கமாய் ஓடிவந்து அவனை படபடப்பாய் பார்த்தாள். எங்கே போகிறார். எதற்காகப் போகிறார். சங்கரி நினைத்ததை, காந்தாமணி, தம்பியிடம் GL-Tir. "லீவு நாளும் அதுவுமா வீட்ல இருக்காம எங்கேப்பா போறே. குறைஞ்சத எங்கிட்டேயாவது பேசிக்கிட்டு இருக்கலாம் பாரு" "போகும்போது எதுக்குக்கா மறிக்கிறே.? "ஒன்ன மறிக்கலேப்பா. ஆண்டவன் புண்ணியத்துலே. ராவும் பகலும், நீ சந்தோஷமா இருக்கனும், அதான் என்னோட ஆசை." அவள் பேச்சை முடிக்கும் முன்பே, மனோகர் அக்காவையும், மனைவியையும் ஒரு மாதிரிப் பார்த்தான். பிறகு திரும்பிப் பார்க்காமலேயே, வீட்டிற்கு வெளியே வந்தான். அப்போது, உமாவின் கணவன் இந்திரன் குறுக்கே வந்தான். இரண்டு கண்களுக்குப் பதிலாய் ஒரு கண்ணை மட்டுமே மாறி மாறி பயன் படுத்துவது போன்ற காக்கா கண்ணன். உடலைக் குலுக்காமலும், கண்களைச் சிமிட்டாமலும் அவனால் பேச முடியாது. பொம்மைச் சொக்காவில் சென்டு வாசனை படர, மனோகரிடம் பேசினான். "ஒரு சின்ன உதவி செய்யனும் பிரதர். இப்ப இருக்கிற கம்பெனில எனக்கு இருக்க விருப்பம் இல்லை. ஒரு பாரின் கம்பெனில வேகன்ஸி வந்திருக்கு என் சர்டிபிகேட்டுகளோட நகல்களை நீங்க அட்டெஸ்ட் பண்ணனும். என்னை மாதிரி ஒங்களுக்கு, சம்பளம் இல்லாட்டாலும், அந்தஸ்து அதிகமாச்சே. கெஸ்ட்டட் ஆபீசரா, கொக்கா..." "ஆபீஸ்லதான் சீல் இருக்கு. இன்னிக்கும் நாளைக்கும் லீவு. அடுத்தநாள் காலையிலே, ஆபீஸ் வாங்க இல்லாட்டி ஒரிஜினல் களையும் நகல்களையும் எங்கிட்டே கொடுங்க. நான் செவ்வாய்க்கிழமை சாய்ங்காலம் கொண்டுவரேன்." மனோகர், நேற்று வரை உறவாடிய இந்திரனை எரிச்சலோடு பார்த்தான் அவன் தன்னிடம் பேசிக் கொண்டே, சங்கரியைத் துளைத்துப் பார்ப்பது போல் இருந்தது. எதிர்ப் பார்வை கிடைத்து விட்ட அனுபவமா இந்திரன், மனோகருக்குள் எரியும் தீயில் எண்ணையை ஊற்றினான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/43&oldid=762335" இலிருந்து மீள்விக்கப்பட்டது