பக்கம்:ஒத்தை வீடு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 45 பலகை, அவன் கண்களை முட்டியது. மாத்திரைக்கு முன்பு. மாத்திரைக்குப் பின்பு. என்று விலகிய ஜோடியையும், விலக்கப்படும் ஒட்டிக்கொண்ட அதே ஜோடியையும், படங்களாய் பார்த்தான். இவன் மாத்திரைகளை வாங்கினான். ஒவ்வொன்றும் பதிமூன்று ரூபாய். அறுபது மாத்திரைகளை வாங்கினான். திருப்திக்கு நாளொன்றுக்கு ஒன்றாம். படு திருப்திக்கு இரண்டு. ஆனந்தத்திற்கு மூன்று. பேரானந்தத்திற்கு நான்கு. டில்லிக்குப் போகுமுன், அவளைப் பேரானந்தமாக சந்திக்கத் தயாரானான். சந்தித்தான். சந்தி சிரிக்காத குறைதான். என்றாலும், புதுதில்லி போனாலும், மனம் கேட்கவில்லை. அங்கே, கேஸ் அண்டு செக்ஸ்' என்று பிரகடனப்படுத்தும் சுவரொட்டிகளை முகவரிகளோடு பார்த்தான். அவனுக்கு தன் வயிற்றுக் கோளாறு நினைவுக்கு வந்தது. அடி வயிறு உப்பியிருப்பதும் உணர்வாய்த் தெரிந்தது. உருவமாயம் புரிந்தது. விளம்பரப் படுத்தப்பட்ட இடத்துக்குப் போனான். ஆட்டோவில் போனான். விமானம் கிடைத்திருந்தால், அதில் கூடப் போயிருப்பான். ஒரு கரண்டி சிகப்புப் பொடியும், ஒரு லிட்டர் வெள்ளைப் பொடியும் கொடுத்தார்கள். ஒரு கரண்டி வெள்ளையில் ஒரு மிளகளவு சிகப்பைக் கலந்து, பாலில் போட்டு குடிக்கச் சொன்னார்கள். மருந்தை வாங்கிக் கொண்டு பேருந்துக்கே காசில்லாமல் நடந்தே வந்தான். பத்து நாட்களில் மன்மதனே உபதேசம் கேட்க வருவான் என்று சொன்னதை நினைத்துப் பூரித்து ஒரு மாதம் வரை உட்கொண்டான். நேற்றிரவு, அவளை ஆயதபாணியாகத்தான் எதிர்கொண்டான். ஆனாலும் நிராயுத பாணியாகி விட்டான். நிர்க்கதியாகி விட்டான். நேற்று ராத்திரி வரையான கனத்துப்போன சிந்தனையில், கால்களின் போக்கை அறியாத மனோகரை, ஒரு ஆட்டோக் காரரின் வசவு திரும்ப வைத்தது அவனைச் அங்கேயே கட்டிப் போட்டது. எகிறன.கிறித் திட்டியவனைப் பார்த்துச் சிரித்தான். எப்பவோ சூடுசுரணை அற்றுப் போனவன்போல், மலங்க மலங்கப் பார்த்தான். அப்போது, மலட்டுக் கண்களில், ஒரு விளம்பரப் பலகை தென்பட்டது. ஒய்யாரமான கடை கண்ணிகளுக்கு இடையே, ஒரு செவ்வக வடிவ அறை. அதன் மேல் விதானத்தில் புலிப் பாணி சித்த வைத்திய நிலையம் என்ற துருப்படிந்த பலகை. அதன் அடிவாரத்தில் வைத்தியர் செகன்னாதன் என்ற பெயர் மற்றபடி எந்த மேக்கப்பும் இல்லாத கூடம் இருபக்கத்துச் சுவர்களிலும், ஆகாயத்தை வில்லாய் வளைக்கப் போவதாய் எந்த மார்தட்டலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/46&oldid=762338" இலிருந்து மீள்விக்கப்பட்டது