பக்கம்:ஒத்தை வீடு.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஒத்தை வீடு என்றார். இப்படிப்பட்ட பெரும்பொருளை இழந்து நிற்கிறியே. ஒரு பெண்ணைத் தொட்டாலே தீட்டாயிடுவியே. அப்படியே ஆகாட்டாலும். உன்னால ஒருத்தியை ஊடுருவ முடியாதே. கல்யாணம் ஆகிட்டா..? ஆயுட்டுதா." மனோகர், அவரை மருண்டும், மிரண்டும், பயந்தும், உண்மையைப் பாக்கப் போகிற புதிய தரிசனமாய்ப் பார்த்தான். அவரோ. கேள்விமேல் கேள்வி போட்டார். "குடி. கூத்து. கஞ்சா. சிகரெட்டுன்னு உண்டா. போதை ஊசி போடுறது உண்டா..? இல்லையா...? சந்தோஷம். சரி. துர்ப்பழக்கமுன்னு சொல்றோமே, சுய இன்பம். அந்தப் பழக்கம் இருக்குதா..? "இருந்தது. ஆனால் இப்போ இல்லை." "அந்தக் கெட்ட பழக்கந்தான். நாதம் பேசாததுக்குக் காரணம். பொண்டாட்டிகிட்டே முடியுதா?" மனோகர், தலை கவிழ்ந்தான். அந்தத் தலையைத் துக்கி பதிலளிக்கத்தான் போனான். முடியவில்லை. தலை நிமிர்த்தா மலேயே மென்று விழுங்கிப் பேசினான். "அந்தப் பழக்கம் ஒன்றும் தப்பில்லன்னு. டாக்டருங்க." "எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான். படித்தவன் பாட்டைக் கெடுத்தான்னு சொல்வாங்களே...அது இந்த எம்.பி.பி.எஸ் அரக்கன்களுக்குப் பொருந்தும். அவங்க வாதம். சொத்தை எல்லாம் தெரியும் என்கிற ஆணவத்தில் எழுகிற மூடத்தனம்." "விந்து என்பது பிறப்பின் ஆதாரம், ஆகாயம், வாயு, தேயு, என்ற தந்தைப் பூதங்களும், பிருதிவி, அப்பு என்ற தாய் பூதங்களும் கொண்ட பஞ்ச பூதங்களின் சேர்க்கையே இந்த உடல். இந்தப் பூதங்களின் குறிப்பிட்ட விகிதாச்சார சேர்க்கையே ஒரு உயிர்ப்பொருள். அல்லது. ஜடப் பொருளின் இயல்பையும், உறுதிப் பாட்டையும் தீர்மானிக்குது. அந்தப் பொருளை சமச்சீர் நிலையில் வைக்கிறது. இதைத்தான் இங்கிலீஸில் மெடாபாவிஸம் என்கிறான். உன் உடம்பில் இயற்கையாய் இருந்த இப்படிப்பட்ட சமச்சீர் நிலைகளை. நீ செயற்கையாய் செய்துசெய்து சிதைத்திட்டே. எவள்.கிட்டயும், உன்னால முடியாதே...?” மனோகர், தட்டுத்தடுமாறி சந்தேகம் கேட்டான். 'வாயுக் கோளாறாய் இருந்தாலும். நாதம் பேசாமல் இருக்கலாமே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/49&oldid=1516716" இலிருந்து மீள்விக்கப்பட்டது