பக்கம்:ஒத்தை வீடு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். க. காந்தராஜ்

பாலியல் நிபுணர், சென்னை.


முன்னுரை


"இந்த இரண்டு குறுநாவல்களுக்கும், நீர்தான்யா முன்னுரை எழுதணும் என்றார் சு. சமுத்திரம் அவர்கள். முன்னுரை எழுதுற தகுதி எனக்கிருக்கா? யோசிச்சுதான் சொல்றீங்களா..? என்று கேட்டதுதான். இந்த நாவலே, உம்மோட தொழில் சம்பந்தப்பட்டது. அதனாலே நீங்க எழுதினா சரியா இருக்குமுன்னு பட்டது. படிச்சு எழுதுமய்யா. என்று நாவலை என் கையில் திணித்துவிட்டுப் போனார், நண்பர் சமுத்திரம். எனக்குக் கதைகள் படிப்பதில் அதிகமாக ஆர்வம் இருந்ததில்லை. வரலாறு, மானுடவியல், அரசியல், சினிமா (டெக்னிக்கல் விஷயங்கள் பற்றி - நடிகர் நடிகையர்களைப் பற்றி அல்ல) போன்றவை சம்பந்தமான என் தொழிலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதேசமயம், க. சமுத்திரம் போன்றவர்களின் எழுத்துக்கள் என்னை அதிகம் ஈர்க்கும். காரணம், வரலாற்றிற்கும், சமுத்திரம் அவர்களின் நாவல்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். வரலாற்றில், முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிய செய்திகளும், அவர்களின் சாதனைகள், வேதனைகள் மட்டுமின்றி வாழ்ந்த விதமும் அடையாளமின்றி வீழ்ந்த விதமும் சொல்லப்பட்டிருக்கும். இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்ப வர்களின் வரலாறாக இருக்கும். க. சமுத்திரத்தின் கதாபாத்திரங்கள் கற்பனையாக தோன்றாமல், "இதோ இவர்தான் அந்த நாவலில் வருகிற அவரா" என்று நாம் அடையாளம் காட்டுகிற அளவுக்கு உயிருள்ளதாக இருக்கும். ஆனால், அந்த பாத்திரங்களுக்கு வருகிற பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற எந்த எழுத்தாளரும் சிந்திக்காத அல்லது தொடப்பயந்த ஒரு சமூகப் பிரச்சினையை, தன் கதர்பாத்திரங்கள் வழியாக தனக்கே உரித்தான பாணியில் எடுத்துச் சொல்லும்போது, நமக்கு ஏற்படுகிற சிலிர்ப்பும் தாக்கமும் அவரது எழுத்துக்களின் சக்திக்கு ஒர் எடுத்துக்காட்டு. மீண்டும் வித்தியாசம். சமுத்திரம் மீண்டும் வித்தியாசப்பட்டிருக்கிறார். தமிழ் நாவல்களில், பொதுவாக எந்தப் புதுமையும் இருப்பதில்லை. சினிமாவைக் குறை கூறுகிற இந்த தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களும், பெண்களைக் கற்றியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/5&oldid=1248963" இலிருந்து மீள்விக்கப்பட்டது