பக்கம்:ஒத்தை வீடு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சங்கரி, கட்டிலில் குப்புறக் கிடந்தாள். கண்களை மூடி, இருளில் வியாபித்தாள். மத்தியானம் சாப்பிடவே இல்லை. மாடிப்படி ஏறி வந்தவள், கட்டிலில் துக்க மயக்கத்தில் தொப்பென்று விழுந்தாள். அதுவே தூக்க மயக்கமானது. அண்ணி காந்தாமணி, மாடிக்கு வரத்தான் செய்தாள். அவளைச் சாப்பிட வரும்படி கூப்பிடத்தான் செய்தாள். எப்படி வயிற்றுக்குள் சோறு இறங்கும். அந்தப் பேச்சையும், ஏச்சையும் மாமியாரிடமிருந்து கேட்ட பிறகு, தன்னால் சாப்பிட முடியும் என்று அண்ணி நினைத்தது, அதைவிடக் கொடுமை. சங்கரி, சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தாள். மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டாயா என்று, ஆம் அல்லது இல்லை என்று சொல்லும்படி கட்டாயப்படுத்துவது போன்ற இக்கட்டான நிலைமை. ஆட்டையும் புல்லுக் கட்டையும், புவியையும் சேதாரமில்லாமல் சேர்க்கவேண்டியதுபோன்ற பொறுப்பு. பொறுப் பற்றவளுக்கு பதில் சொல்ல முடியாத பரிதவிப்பு. அந்த மூன்று நாட்கள் முடிந்த இன்று சங்கரி மஞ்சள் தேய்த்து சாவகாசமாய்க் குளித்து விட்டு கூந்தலுக்கு வெள்ளைத் துணியால் கட்டுப் போட்டு, பூஜை ஆறைக்குள் நுழைந்தாள். மூன்று நாட்களாய்ப் பார்க்க முடியாமல் போன தெய்வப் படங்களை, தீபம் ஏற்றி, கற்பூரம் கொளுத்திக் கொண்டிருந்தபோது, அதற்கு மரணமண அடிப்பது போல் மாமியார் கத்தினாள். ஒவ்வொருத்திக்கு கல்யாணத்துக்குப் பிறகு, குழந்தை உண்டாகாட்டாலும், பத்து நாளாவது நின்னு வரும். இந்த வீட்ல என்னடான்னா டாண்னு வந்துடுது. என்ன பொம்பளையோ. சாதகப் பொருத்தம் சரியாக இருக்குன்னு சொன்னவனைச் செருப்பால அடிக்கணும். சங்கரி கற்பூரத்தட்டை சுற்றாமல், கழற்றாமல், கீழே வைத்தாள். பூஜை மணியை அலட்சியப் படுத்தினாள். ஏதேச்சயாய்க் குங்குமம் எடுத்தவள் வழக்கப்படி அதை நெற்றியில் பொட்டாக்கி திருமாங்கல்யத்தில் ஒரு புள்ளியாக்குகிறவள், குங்குமத்தைப் பீடத்தில் சிதறடித்தபடியே, வெளியே வந்தாள். மாமியாரை முறைத்துப் பார்த்தாள். அவளோ, சண்டைக் கோழியாய் கைகளை மடித்து விலாவில் தட்டியபோது, சங்கரி பொறுமை இழந்தாள் 'இனிமேல் எது கேட்கணுமுன்னாலும் ஒங்க பிள்ளை கிட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/54&oldid=762347" இலிருந்து மீள்விக்கப்பட்டது