56 ஒத்தை வீடு கடித்துக் கொண்டிருந்தவன், பதினோராவது நாாான இன்று, அவன் உடம்பு முறுக்கேறியிருந்தது. பார்வை மதப்பானது. எப்படியோ அவளுக்குத் தெரியாமல் சாப்பிட்ட மருந்து இன்றிரவு அவளுக்குத் தன்னை தெரியப்படுத்தும். மனோகர், அவளை நம்பிக்கையோடு நெருங்கினான். அந்தப்பூப் பொட்டலத்தை பல்லால் நார் உரித்து விடுவித்தான். தலையை கைகளால் மூடிக் கொண்டவளை, தன் மார்பில் கிடத்தினான். அவள் கைகளை தன் கைகளால் இறக்கினான். பிறகு அந்தப் பூவை அவள் தலையில் சூடினான். அவள் வீறாப்பாய் தலையை ஆட்டியபோது, அவன் கைபட்டு சில பூக்கள் கசங்கின. தலையில் சூடிய பூ கட்டிலில் விழுந்தது. அவள் செல்லமாக ஒரு பூவைக்கூட வைக்க முடியலே. என்று சொன்னபோது, அவன் உடல் முறுக்கு லேசாய்த் தளர்ந்தது. மனம் வாதைப்பட்டாலும், உடல் அவள் பக்கமாய்ச் சாய்ந்தது. நடுக்கமற்ற சாய்வு. நம்பிக்கை போகாத அணைப்பு. அவள், அவன் பக்கமாகத் திரும்பி அவன் தோள்களைப் பற்றியபோது. மாமியாரின் கனைப்புக்குரல் கேட்டது. வாசலுக்கு வெளியே உடம்பையும், உள்ளே தலையையும் போட்டுக் கொண்டு நின்றாள். "அக்கா விஷயம் என்னடா ஆச்சு..." என்றாள். சங்கரி, மாமியாரை ஏறிட்டுப் பார்க்கவில்லை. கணவனின் தோள்களைப் பற்றிய கைகளை அகற்றவில்லை. பார்த்தால் பார்க்கட்டும்: ஆனாலும், மனோகர் அவள் கரங்களை அவசர அவசரமாக எடுத்துப் போட்டான் அம்மா பக்கம் போய், அவளை எரிச்சலாய்ப் பார்த்தான். உடனே அவள், "காந்தாமணியோட கொழுந்தன் லெட்டர் போட்டிருக்கான். மனோகர் பயுலால என்ன செய்ய முடியுமுன்னு பார்க்கத்தான் போறோம். வண்டிப் பாதை வண்டிப் பாதைதான். அவன் ஆபீசரா இருக்கலாம். ஆனால், எங்க ஊருக்கு, அவன் ஒரு இரப்பாளிப் பயதான்னு ஊரு முழுக்கச் சொல்லிட்டு வாரானாம். இந்த ராமசாமிப் பய. எல்லாம் நீ கொடுக்கிற இளக்காரம். அவனை கைவிலங்கு கால்விலங்கு போட்டு ஜெயிலில அடைச்சிருந்தா இப்படிப் பேசுவானா..? ஒன்னால முடியும். ஆனால், மனசுதான் இல்ல. சரிசரி. சாப்பாடு சூடு ஆறிடும். வந்து சாப்பிட்டுட்டு அப்புறம் கொஞ்சுங்க குலாவுங்க... என்றாள். மனோகர், அம்மாவின் முதுகைத் தள்ளிக்கொண்டே படியிறங்கினான். சங்கரி, அவனை மாமியாரிடம் ஒப்படைக்க விரும்பாதவள் போல் கணவனைப் பின் தொடர்ந்தாள். தம்பியையும், நாத்தனாரையும் ஒருசேரப் பார்த்த காந்தாமணிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. அவன் மாடிக்குப்
பக்கம்:ஒத்தை வீடு.pdf/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
