பக்கம்:ஒத்தை வீடு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV இருக்கும். ஒரு மத்திய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சம்பிரதாயமான ஒரு பெண்ணுக்கு நேருகிற குடும்பப் பிரச்சினைகள்தான் பெரும்பாலான தமிழ் நாவல்களின் கரு. எதிர்வீட்டு வாலிபன், விரோதமாகிவிட்ட அத்தை அல்லது மாமா மகன், சக மாணவன், சக ஊழியன் என்ற யாராவது ஒருவரிடத்தில் காதல், வேண்டாத திருமணம், ஆகாத மாமியார், மலடு, நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது கணவன், சரியான முன்றயில் வளராத மகன்-மகள், வரதட்சணை என்று ஒரு வட்டதுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், பெண்களுக்கு முப்பத்து மூன்று என்ன முன்னூறு சதவீதமே உரிமை வழங்கினால்கூட, இவர்கள், இந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள். ஏதோ அத்தி பூத்தாற்போல், சிலபேர் துப்பறியும் நாவல்கள எழுதுகிறார்கள். அதிலும்கூட "Danselin Distres" (ஆபத்தில் இருக்கும் அழகி) என்ற ஃபார்முலா இருக்கும். விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் எழுதுவது என்பது தமிழில் இல்லையென்றே சொல்லலாம். ஒரு பிரபலமான விஞ்ஞானத் தொடர், பின்னால் அது தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. அதில் எத்தனை பங்கு சுய கற்பனை என்றால், சோகம் 1984 என்ற மிகப் பிரபலமான ஆங்கில நாவல், Presiclent's Analyclot, West World, Logan's Run Gijssing ous) ஆங்கிலப் படங்களின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி, தன் சுய கற்பவனையில் எழுதியதாகக் காட்டிய அந்தப் பிரபல எழுத்தாளரின் முயற்சி, விவரம் தெரியாதவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது வேறு விஷயம். சமுத்திரத்தின் நாவல்களில் சம்பவங்கள் கொஞ்சம்தான் இருக்கும். ஆனால், மனிதர்களின் மனவியல், நூல் முழுவதும் விரவிக் கிடக்கும். சமூகத்தில், வெளிவராத, இருட்டாக்கப் பட்டிருக்கிற பல மனோ வியாகூலங்களை அலசி ஆராய்ந்து அந்த சூழ்நிலையில், மனிதர்களின் நடத்தையில் ஏற்படும் விசித்திர, புரியாத மாறுதல்களை அப்படியே எழுத்துக்களின் மூலமாகக் கொண்டுவரும் அற்புத சக்தி கொண்டவர் சமுத்திரம். சிட்டுக்குருவி - கருங்குரங்கு - பச்சைப்புறா முதலாவது நாவலின் மையக்கரு ஆண்மை இழப்பு. இது, நம் நாட்டீைப் பொறுத்தவரையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்கள் சம்பந்தப்பட்டது என்று அசட்டை செய்கிற விவகாரம். அதன் உள்ளே நுழைந்து பார்ப்பவர்கள், மிகமிகக் குறைவு. எருதின் புண் காக்கைக்கு எப்படித் தெரியும் என்பார்கள். அதைப்போல் இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/6&oldid=762353" இலிருந்து மீள்விக்கப்பட்டது