பக்கம்:ஒத்தை வீடு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஒத்தை வீடு அலைந்தாலும் இவனைச்சுற்றி வட்டமிட்டவள். ஒரு தடவை 'என்னைக் கட்டிக்கிறியா? என்று கேட்டவள், "இந்தக் காலத்தில் பெண் அதிகாரிகள் ஒரு நல்ல கணவனையே விரும்புகிறார்கள். மொழியோ, இன்மோ முக்கியமல்ல. ஒன்னை எனக்குப் பிடித்திருக்கு. நீ தேகக் கட்டுள்ளவன். ஒழுக்கமானவன். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களை மதிக்கத் தெரிந்தவன். கட்டிக்கோ." என்று மன்றாடியவள் இவன்தான் பயந்து போனான். அம்மாவுக்கு மாரடைப்பு வந்துவிடக்கூடாதே என்று அச்சப் பட்டான் தட்டிக் கழித்தான். நல்ல காலமோ கெட்ட காலமோ. இவளுக்கும் சென்னையிலேயே வேலை. உள்ளே வந்த வேகத்திலேயே, மிஸ், நீலம், ஒரு போடு போட்டாள். "ஏம்பா. ஒன்னோட டிரெயினிங்குல ஒன்னத்தான் பெஸ்ட் டிரெயினின்னு தேர்ந்தெடுத்தாங்களாம். எங்கிட்ட ஏன் சொல்லலே.? ஒய்ப்கிட்டயாவது கிஸ் அடிச்சு சொன்னியா..? இன்னிக்கு நான் ஒன்ன விடப்போறதா இல்லை. இதுக்கு நீ எனக்கு பார்டி கொடுக்கணும். இல்லாட்டி நான் கொடுக்கணும். நைட்ல என் பிளாட்ல வச்சுக்கலாமா. ஏன் அப்படிப் போக்கிரித்தனமாக பார்க்கிறே.” மனோகர், அவள் நெஞ்சை ஊடுருவி, அவள் மனதை தரிசித்தான். தோழனாய், காதலனாய் வார்த்தெடுத்த மனக்காரி. அழகுக்கு அழகு. ஆசைக்கு ஆசை. அந்தஸ்துக்கு அந்தஸ்து. இவளை விட உற்ற தோழி யாரும் இருக்க முடியாது. "ஒக்கே நீலம். இன்னைக்கு நைட்ல உன் பிளாட்தான் என் வீடு” "திருடா. திருடா." மிஸ் நீலம், மேஜையில் அப்படியே படிந்து அவன் கழுத்தில் இரு கரங்களை வளைத்துப் போட்டாள். கதவு மீண்டும் சத்தம் போட்டதும், பால்குடிக்கத் தெரியாத பூனையாய் நாற்காலியில் பம்மி உட்கார்ந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/69&oldid=762363" இலிருந்து மீள்விக்கப்பட்டது