சங்கரி, கண்ணுக்கு மையிடப் போனாள். ஆனாலும் மூக்கு வரை வந்த அந்த வட்டக் குப்பிளை ஒதுக்கி வைத்தாள். பவுடரைக் &zit ஒப்புக்குப் போடுவது போல் முகம் முழுக்க அப்பாமல், அங்கும் இங்குமாய் தடவிக் கொண்டாள். கவரிங் வளையல்களைக் கழட்டி விட்டு, பீரோவில் இருக்கும் தங்க வளையல்களைப் போட நினைத்து கண்ணாடி பீரோவின் டிராயரைத் திறக்கப் போனவள், அதை இருந்த இடத்திலேயே விட்டு வைத்தாள். மனமோ அல்லது மனசாட்சியோ அறிவுறுத்தியதற்கு அவள் இணங்கினாள். அவள், போவது அலுவலகப் பணிக்குத்தானே தவிர, அழகுப் போட்டிக்கு அல்ல. அதோடு அவரை சவால் விட்டுப் போகவில்லை. இதனாலேயே அவன் பிறந்தநாளில் வாங்கிக் கொடுத்த வாயில் புடவையைக் கட்டிக் கொண்டாள். அவன் வரணும் வரணும் என்பது போல் மாடிப்படி முனைக்குப் போனாள். வரக்கூடாது என்பது போல் திரும்பி வந்தாள் வேலைக்குப் போவது சம்பந்தமாக ஏற்பட்டத் தகராறுக்கு ஒரு மாத வயதாகிவிட்டது. ஆனாலும் அது குழந்தையாய் வளராமல், கிழடாய்ச் சுருங்காமல் அப்படியே இருந்தது. இப்போது அவன் வருவதும் போவதும் அவளுக்கே தெரியாது. அரசங்காப் பயணமா. அல்லது ஒரு மாதிரிப் பேசிக் கொள்கிறார்களே. அப்படிப்பட்ட அலைச்சலா அவளும் அலட்டிக்க வில்லை. அவனைப் பொறுத்த அளவில், அவள் மறக்கவில்லை என்றாலும் மரத்துப் போனாள். அன்றைக்கு அவளை, உள்ளே போ. அல்லது வெளியே போ. என்று சொன்ன கணவன், எப்போது வேண்டும் என்றாலும் வீட்டை விட்டுத் துரத்தலாம். துரத்துகிறானோ இல்லையோ.. மாமியாக்காரி துரத்த வைத்து விடுவாள். அண்ணி வேறு ஊருக்குப் போய் விட்டு இன்றுதான் திரும்பியிருக்காள். அவள் விவகாரம் முடிந்ததோ. முடியலையோ பழைய அண்ணியாக இருந்தால் இந்நேரம் இங்கு வந்திருப்பாள் அல்லது இவள், அங்கே போய் இருப்பாள். தாயும் மகனும் அண்ணி எழுதிய கடிதங்களைக் கண்ணில் காட்டியதில்லை அம்மா எழுதும் கடிதங்களைக் கூட பிரித்து, மீண்டும் சிநேகிதியான உமா மூலம் ரகசியமாய்ப் படித்து பழையபடி ஒட்டுவதாக உமாவின் மாமியார் சொன்னாள் இனிமேல் அம்மாவை அலுவலகத்திற்கே கடி தம் எழுதச் சொல்லலாம்
பக்கம்:ஒத்தை வீடு.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
