பக்கம்:ஒத்தை வீடு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ஒத்தை வீடு பார்த்தாள். இடுப்புக்கு மேலே துணிச் சிதறல்களோடும், கிழிசல் பொத்தல்களோடும் ஆண் கவர்ச்சி ஆட்டக்காரன் போல் நின்ற மனோகர், மருவி மருவிச் சொன்னான். "வேலைக்குப் போகக் கூடாதுன்னேன். அதுக்கு இந்தப்பாடு படுத்துறாள். எத்தனை வருஷம் ஜெயிலில் இருந்தாலும் சரி. இவளை நான் விடப்போறதா இல்லை." அவன் மாவீரனாய் மனைவிமீது பாயப் போனபோது, அக்காக்காரி இன்னொரு ஒற்றைக் கையால் அவனைப் பிடித்துக் கொண்டாள். அந்தச் சமயம் பார்த்து உமா ஓடிவந்தாள். லேசாய் அமைதிப்பட்டு நின்ற சங்கரி, அவளைப் பார்த்ததும் பதட்டமானாள். "முதல்ல இங்கிருந்து போடி போறியா? இல்லியாடி? அடுத்துக் கெடுத்தவளே. நம்பிக்கைத் துரோகி. இந்த வீட்ல உனக்கென்னடி வேலை? நான் சொன்னதுமாதிரி ஒன் புருஷன் அனுப்பி வைச்சானா?” உமா, கைகளைப் பிசைந்து திரும்பி நடக்கப் போனபோது, சொர்ணம்மா, அவளைப் பிடித்துக் கொண்டு, பதில் கத்துக் கத்தினாள். "இது என் வீடு. இவள், எனக்கு இன்னொரு மகள் மாதிரி. போகமாட்டாள். என்னடி செய்வே. ஏய். உமா. நீ நில்லும்மா." உமா, நிற்கத்தான் செய்தாள். ஆனால், இந்திரன் ஓடிவந்து, அவள் கையைப் பிடித்து, நாயை இழுப்பது மாதிரி இழுத்துக் கொண்டு போனான். ஆனாலும், முன்னெச்சரிக்கையாய், சங்கரிக்கு முகத்தைக் காட்டாமல், படிகளுக்குள் உடம்பைப் பதுக்கிக் கொண்டு உமாவோடு ஓடிவிட்டான். இருவரையும் இரு கரங்களால் தடுத்து நின்ற காந்தாமணி, தம்பியை ஒருபுறமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாத்தனாரைப் பார்த்து. நியாயம் கேட்பதுபோல் கேட்டாள். “என் தம்பியால, அது முடியலைன்னு இந்த உமாகிட்ட கேவலமாப் பேசியிருக்கே நான், வலது காதில வாங்கி இடது காதில வச்சுட்டு இருக்கேன். நீயே சொல்லு. என் தம்பியைப் பேடின்னு பேசினது மட்டுமில்லாம, இப்போ அவன அடி அடின்னு அடிச்சிறிக்கிறியே. இது ஒரு பொம்பள செய்கிற காரியமா. மகள் சொன்னதை சொர்ணம்மா, உன்னிப்பாய்க் கேட்டாள். முதலில் அவளுக்குப் புரியவில்லை. புரியப் புரிய வாயிலும் வயிற்றிலும் அடித்தபடியே அந்த அறையே அதிரும்படிக் கத்தினாள். மருமகள், முன்னால் விரல்களை நீட்டி மடக்கியபடியே பேசத் தெரிந்த மிருகமாய்க் கத்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/85&oldid=762381" இலிருந்து மீள்விக்கப்பட்டது