பக்கம்:ஒத்தை வீடு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 87 பதவியின் பொறுப்பில்லை. தெருப் பொறுக்கியாய் ஆகிப்போன நினைவில்லை மழை, தூறல் ஆகிவிட்டது. இப்போதுதான் அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மழைத் துளிகள் பட்டு, மங்கலான கடிகாரக் கண்ணாடிக்குள், சின்ன முள்ளை பெரிய முள் கவ்வியிருந்தது. ஒல்லியான வினாடி முள், வட்டமடித்தது. கடைசி முள்ளின் நிலைதான் அவன் நிலையோ, லேசான நினைப்பு. பழைய ரசனையின் பெருங்காய வாடை வெறுமையாய்ச் சிரித்தான். பிறகு அந்த வெறுமைக்குப் பயந்துபோய் குடையைப் பிடித்துக் கொண்டு சென்ற, ஒரு பெண் பின்னால் போனான். அவளை எட்டிப் பிடிப்பதுபோல் நடந்து, லேசாய் கனைத்தான். அந்தக் கனைப்புக்கு அவள் முகம் கொடுக்காதபோது, திரும்பி நடந்தான். எதிர்பக்கம் இன்னொருத்தி பாளம் பாளமான பட்டை டிசைன் போட்ட புடவைக்காரி, பேருந்தில் அடிபடாத குறையாக அந்தச் சாலையைக் கடந்தான். அவளுக்கு இணையாக நடந்தான். அவளோ, அவனை ஒருமாதிரிப் பார்த்தாள். மணி என்னாச்சு என்றாள். அவன் அவளோடு போயிருப்பான். அதற்குள், கங்கா அவனை வழி மறித்தாள். அவன் கைகளைப் பற்றியபடியே சாடினாள். "சொன்ன இடத்தில் நிற்காமல் ஏன் இப்படி அலையறே. அங்க போய் நின்னால், பொறுக்கிப் பசங்க முறைக்கிறாங்க. உன்னோட பேஜாருய்யா." மனோகர், அவளை ஏறிட்டுப் பார்த்தான். இப்போதெல்லாம், அவள் 'ஸார் போடுவதில்லை. போய்யா வாய்யாதான். கள்ளக் காதலிலும் அவளுக்கு ஏக புருஷ விசுவாசம். அவள் வருவாள் என்று தெரிந்தே அலைந்தான். ஆனாலும் பெண் தேடினான். எதார்த்தத்தால் தடுக்கப்படவில்லை அந்த வீண் முயற்சியிலும் ஒரு ககம். அந்த நாய் அலைச்சலிலும் ஒரு கிளு கிளுப்பு. மனோகர், அவளை மீண்டும் மீண்டும் பார்த்தான். நீண்ட முகத்திற்குப் போட்டியாக பின்புறத் தலையாய் முளைத்த கொண்டை அதில் பாதியை மறைத்து மல்லிகைச் சரத்தின் நிலா வெளிவட்டம் செஞ்சிவப்புப் பிடரியை கருப்புக் கோடுகளாய்க் காட்டி கொண்டையில் தொடங்கி பிடறியில் முடியும் முடிக் கிராதிகள். பாடதி கம்மல்களுக்குப் பதிலாக அங்கும் இங்குமாய் சுழலும் மீன் வடிவ வளையங்கள். இடது கையில் பொன்னிறக் கடிகாரம். வலது கையில் கைப்பை எல்லாம் இவன் வாங்கிக் கொடுத்ததுதான் அவள் வாங்க மறுத்தும் இவன் திணித்தவைதான். மனோகர், தன்னை ரசிப்பத்ை கங்கா ரசனையோடு பார்த்தாள். போகப் போகிற அந்த இடத்தில் எவருக்கும் அந்தச் சந்தேகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/88&oldid=762384" இலிருந்து மீள்விக்கப்பட்டது