பக்கம்:ஒத்தை வீடு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஒத்தை வீடு வந்துவிடக் கூடாது என்பதற்காக இவனே சொல்லி, அவள் செய்த அதிகப்படியான அலங்காரம். அது அலங்கோ மாகி விடக் கூடாதே என்ற பயம். அந்தப் பயத்தை அவளுள் ஏற்படுத்தியவனும் இவன்தான் இந்த இரவில் ஆட்டோவில் போனால், போலீஸ் செக்போஸ்டில் மடக்கி பூர்வோத்திரம் கேட்கலாம் என்று விவரம் சொன்னான். அதற்குப் பரிகாரமாய் பேருந்தில் போகலாம் என்றான். போகிற இடத்தில், இவள் வாயைத் திறக்கக் கூடாது என்றான். அதே சமயம் பயப்படாமல் அசத்தலாகப் பார்க்க வேண்டும் என்றான். இதுவே அவளுக்குப் பயத்தைக் கொடுத்தது. போலீஸில் சிக்கினால் படாதபாடு. அந்தக் கஸ்மாலத்துக்குத் தெரிஞ்சா வெட்டிப் பூடுவான். இந்த ஆளையும் சேர்த்து வெட்டுவான். புருஷன் மேஞ்சாலும், பெண்டாட்டி யோக்கியமா இருக்கணுமுன்னு பினாத்துற ஜென்மம். அதோட மனசாட்சின்னு. "வானாய்யா. வானாய்யா.” "என்ன ஒனக்கு பிடிக்கலியா." "பிடிக்காட்டி வருவேனா." "அப்போ பேசாம வா." "நம்ம ஆபீஸ்ல வேற, ஒரு மாதிரிப் பேசுறாங்கய்யா." "அங்கே ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ண லவ் பண்ணிட்டுத் தான் இருக்கு. ஜோடிகளை மாற்றி மாற்றி லவ் பண்ணுது அதுகளுக்கு நம்மளப் பத்தி பேச யோக்கியதை இல்லை." "ச்சீ என்னப்போல எவளும் இருக்கமாட்டாள்." "என்னைப்போல ஒருத்தன் ஒனக்குக் கிடைப்பானா." "நிசந்தான்யா. அம்போன்னு இருந்த என்னை இப்படி பைத்தியமாக்கிட்டியே. சதா ஒன் நெனப்புத்தான்யா." மனோகர், பெருமை பிடிபடாமல் தன்னையே பார்த்துக் கொண்டான். வெற்றி பெற்றவன் போல் புன்னகைத்தான். சாதாரண வெற்றியல்ல சங்கரியைத் தோற்கடித்த வெற்றி, எப்படி இருக்காளோ.. எப்படியும் இருக்கட்டும். இந்தச் சின்ன வீடே இனிமேல் ஒரு பெரிய வீடு. அடியே சங்கரி. ஒன்கிட்ட முடியாதது இவள் கிட்ட முடியும். காரணம் இவள் என்னை நேசிக்கிறவள்.' இருவரும், பேருந்தில் ஏறி, மாமல்லபுரத்திற்கு மூன்று கிலோமீட்டருக்கு முன்பே இறங்கிக் கொண்டார்கள் ஆரவாரமற்ற சாலை இருவரும் பயந்துபோய் ஒருவருக்கு ஒருவர் காங்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/89&oldid=762385" இலிருந்து மீள்விக்கப்பட்டது