பக்கம்:ஒத்தை வீடு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 97 அவளை கட்டிக் காக்கிறவன் பெரிய ஆம்பிளை. நீ மட்டும் என்ன விட்டுட்டுப் போயிருந்தே என்ன பீஸ் பீஸா ஆக்கி இருப்பாங்க. நானு ஒரு கபிரிச்சி. என்னெல்லாமோ பேசியிருப்பேன். ஆடியிருப்பேன். என்ன மன்னிச்சேன்னு. ஒரே ஒரு வார்த்தை. எனிக்கி ஒன் ஆபீஸ்ல கூட்ற வேலை வேணாம். கம்பெனி வேலையும் வேணாம். என்ன மன்னிச்சேன்னு. ஏன்னா... இனிமேங்காட்டி நாம பாக்கப் போறோமோ இல்லியோ. சொல்லு ஸாரே. என் வவுத்துல பால் வாரு சாரே." அழப்போன கங்கா, பின் பக்கமாக லேசாய்ச் சாய்ந்தாள். அப்படியும் கண்ணிர் தெரித்தது. அவன், அவளை அழுத்தமாகப் பார்த்தான். அடக்கி வைத்திருந்த உணர்வுகளை கொட்டினான். "இந்தா பாரு கங்கா மன்னிப்புன்னு வந்தால், நீதான் என்னை மன்னிக்கனும், கலங்காத குளமா இருந்த உன்னை, குட்டையாய் கலக்கிட்டேன். ஆனால், ஒன்னோட நட்பு என் ஆயுள் வரைக்கும் நெனப்பா இருக்கும். பிரியப்போறதா நெனச்சுச் சொல்லல, நாம பிரியப் போறதும் இல்ல. ஆனா. அதேசமயம் நம்ம ரெண்டு பேரோட நடவடிக்கையும். வேற மாதிரி இருக்கும். இருக்கணும். நான் நம்பிக்கைத் துரோகியுமில்ல. நிச்சயம் ஒரு நல்ல செய்தி வீடு தேடி வரும். ஆபீஸுக்கு வாரத மட்டும் நிறுத்திடாதே. ஆபீஸ்ல நான் அதிகாரியில்லே. நீ பெருக்குறவள் இல்லே. நான் மனுஷன். நீ மனுவி. சரி. போய்வாம்மா. சீக்கிரமா ஆபீஸ்ல போய் வேலையப் பாரு." "அழ வைக்கிறியே ஸாரே. அழ வைக்கிறியே. ஒன் நெலமய நினைச்சா எனிக்கு மனசு கேட்க மாட்டேங்குதே." கங்கா, உதடுகளைக் கடித்தபடியே, அவனை உற்றுப் பார்த்தாள். அவளை தனக்குள் உள்வாங்குவது போல், அசைவற்ற கண்ணாடி போல் சலனமின்றி நின்ற மனோகர், எதிர்திசையில் நடந்தான். இலக்கு நோக்கிச் சென்றான். சங்கரியைப் பார்க்க வேண்டும். அவள் கண்களைத் துடைத்து விடவேண்டும். அவளுக்கு எது தேவையோ அதை ஈடேற்ற வேண்டும். அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மனோகர், நடையில் ஒரு மிடுக்கு. பார்வையில் ஒரு கம்பீரம். கால்கள் தரையில் அழுந்தப் பதிந்தன. சாய்வாய் நடக்காமல் நேராய் நடந்தான். கெட்டதைப்போல் நல்லதும் தொடர்ந்து வரக்கூடியது. ஒரு நல்ல குணம் இன்னொரு நல்ல குணத்தைத் தொற்றிக் கொள்ளக் கூடியது. அழுகையும், சிரிப்பும் இப்படித்தான். இனிமேல் சிரிக்க முடிகிறதோ இல்லையோ, அழப்போவதில்லை. அழ வைக்கப் போவதும் இல்லை. எப்படி இருக்காளோ, எப்படி யெல்லாம் நடந்திருக்கேன். கங்காவை காப்பாற்றியதுபோல் 2.7。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/98&oldid=762395" இலிருந்து மீள்விக்கப்பட்டது