பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றே ஒன்று. 驾

'இறைவனுக்கு.” அவனுக்கு ஆளானல் என்ன பயன் கிட்டும்? " நாம் பண்ணும் தவம் பலிக்கும்." அதை எப்படித் தெரிந்து கொள்வது ? 'பகீரதனுக்குக் கங்கையின் அருள் வேண்டியிருந்தது. அவன் பிரமனே நோக்கித் தவம் புரிந்தான். கங்கையையே கோக்கித் தவம் செய்தான். அவன் தவம் பலிக்கவில்லே, கடைசியில் சிவபிரான நோக்கித் தவம் செய்தான். அது தான் பலித்தது. யாருக்கு எந்தப் பொருள் வேண்டுமான லும் அந்தப் பொருளேயே கோக்கி முயல்வதால் பயன் இல்லை ; தன்னே நோக்கித் தவஞ்செய்தால் யாவும் கிடைக் கும் என்பதை *இறைவன் கங்காதரனக இருந்து காட்டு கிருன்." х . தவம் செய்வது என்ருல் புலனடக்கம் வேண்டும். அது அவ்வளவு எளிதில் செய்யும் காரியம் அல்லவே. நாம் பாத கங்களைத்தானே செய்துகொண்டிருக்கிருேம் ?

'தவம் செய்யாவிட்டாலும் அவனுடைய திருவடியைப் பற்றில்ை போதும். முன்பு என்ன் பாதகம் செய்திருந்தா லும் அதை மறந்து நமக்கு உயர்ந்த கிலேயைத் தருவான்.” அதற்குச் சான்று உண்டர் . . . . . 'அவன் திருமுடியில் உள்ள சந்திரனேசாட்சி. அவன் தக்கயாகத்திற்குச் சென்று அராசகமான காரியம் செய் தான். காமத்தால் தவறு செய்தான். ஆயினும் தக்கயாக சங்காரத்தின்போது இறைவனுடைய திருவடித் தொடர்பு கிடைத்தது. அதன் பயனக அவன் இறைவன் திருமுடி யில் ஏறி உட்காரும் பேறு பெற்ருன்.” .

  • வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயல்ப் படும்".-(குறள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/17&oldid=548434" இலிருந்து மீள்விக்கப்பட்டது