பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஒன்றே ஒனது

அது ஒரு பேரு ?

"அதைவிட வேறு என்ன வேண்டும்? வானில் இருக் கும் மதியம் குறைகிறது . வள்ர்கிறது. குறையும்போது தேய்வு உண்டாகிறது : நிறையும்போது மறு உண்டா கிறது. இறைவன் திருமுடிப்பிறைக்கோ குறைவதும் வளர்வதும் இல்லை. அதல்ை தேய்வும் மறுவும் அவனுக்கு இல்லை."

அறியாமையுட் சிக்கியிருக்கும் நமக்கு இந்தப் பாக்கி யம் கிடைக்குமா ?

"அவனே கினைத்தால் திருவடி தோன்றும். அதைப் பற்றிக் கொள்ளலாம். பின்பு அவன் தன் கரத்தைக் காட்டு வான். நம் அறியாமை இருளே ஒட்டி மலமாகிய குப்பையைச் சுட்டெரிக்கும் ஞானக்கினியை அவன் தன் திருக்கரத்திலே வைத்திருக்கிருன்.” - .

இப்படியெல்லாம் பொருள் விரியும்படியாகத் தம்மை

ஆளாகக் கொண்ட இறைவனுடைய அடையாளத்தை எடுத்துச் சொல்கிருர் அம்மையார். -

கங்கையான், திங்கட் கதிர்முடியான், பொங்கொளிசேர்

அங்கையாற்கு ஆளாம் அது. -

~. . . ; k

காரைக்கால் அம்மையார் இறைவனுக்கு ஆளாக வேண்டும் என்ற ஒன்றைப்பற்றியே கினைத்தார். அவர் சிந்தனையும் கற்பனையும் அவனுக்கு அடிமையாகும் நெறி யிலே படர்ந்தன. பிறகு இப்படி அடிமைப்பட வேண்டும் என்று ஒரு வகையைத் துணிந்து பற்றிக் கொண்டார். இறுதியில் அவர் உள்ளத்தினின்றும் மாருமல் இறைவ லும் அவரும் ஒன்றுபட்ட ஆண்டானடிமை யிறுக்கம் உண்டாகிவிட்டது. அதைத் தவிர வேறு நாட்டமே அவருக்கு உண்டாகவில்ல. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/18&oldid=548435" இலிருந்து மீள்விக்கப்பட்டது