பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - ஒன்றே ஒன்று

என்னவோ இனிய கவிகளாகப் பாட வேண்டும் என்பது தான். அதற்குத் தகுதி வேண்டாமா ?” . - "புலவர்களுடைய பாடல்களைக் கேட்ட மன்னர் நீங்கள். உங்களுக்குப் புலமை கிரம்ப இருக்கிறது."

"நான் அறிவு தெளிந்த பெரியவர்களே காடிச் சென்று உபதேசம் பெருதவன். எனக்குக் கவிதை பாடும் தெளிவு எப்படி வரும்? என்ருலும் தீங்கவி பாட வேண்டும் என்ற ஆசையோடு பாடத் த்ொடங்கி விட்டேன்." தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்,

திங்கவி பாடலுற்றேன். (அறிவு தெளிந்த மக்களைச் சேர்ந்தேன் இல்லை. ஆயினும் இனிய கவியைப் பாடத்தொடங்கினேன். -

தெள்ளிய தெளிந்த தீங்கவி - இனிய கவிதை.) பெரியவர்கள் எப்போதும் தம்மைக் குறைத்தே பேசிக்கொள்வார்கள். . பணியுமாம் என்றும் பெருமை" என்று திருவள்ளுவர் சொல்கிருர் சேர மன்னர், பெரும் புலவர், பல பெரியோருடைய நட்பைப் பெற்றவர் என்று அறிந்து அவரை அணுகினல், "நான் கல்லவர்களோடு சேராமல், பாட்டு மாத்திரம் பாட வேண்டும் என்று அசட்டுத் துணிவோடு தொடங்கி விட்டேன்' என்கிறர்.

"சேரர் பிரானே, நீங்கள் எவ்வளவு அழகாகப் பாடி - யிருக்கிறீர்கள்? சொற் சுவையும் பொருட் சுவையும் செறிந்த பாடல்கள் அல்லவா உங்கள் பாடல்கள்?

சொல்லாவது பொருளாவது நல்ல சொற்களை கான் தேடிச் சென்ருலும் எனக்குக் கிடைப்பதில்லையே! நல்ல பொருள் இன்னதென்று எனக்குத் தெரியாது. ஒள்ளிய சொல்லும் பொருளும் நல்ல கவிஞரைத் தேடி வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/26&oldid=548444" இலிருந்து மீள்விக்கப்பட்டது