பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஒன்றே ஒன்று

கள்ளிய புக்கால் கவிகள் ஒட் . டார்: கடல் நஞ்சுஅயின்ருய் கொள்ளிய அல்லகண் டாய் புன்சொல்;

ஆயினும் கொண்டருளே.

(அயின்ருய் உண்டவனே! கொள்ளிய-கொள்ளத் தகுவன. புன் சொல் பொலிவற்ற சொல்; சொல்லுக்குப் பொலிவாவன பொருட் சிறப்பும் ஒசை யினிமையும்.)

தெள்ளிய மாந்தர் என்றது சிறந்த கவிஞர்களே: "உளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புல வோர்’ (சகல கலாவல்லி மாலை) என்று குமரகுருபரர் புல வரைச் சிறப்பித்துச் சொல்வார்.

சேரமான் பெருமாள் காயனர் சொல்வது அத்தனையும் பொய் என்று இந்த அழகிய பாட்டே காட்டவில்லையா?

இது பொன்வண்ணத்தந்தாதியில் 24ஆம் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/30&oldid=548448" இலிருந்து மீள்விக்கப்பட்டது