பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஒன்றே ஒன்று

வளர்த்த செவிலி இருக்கிருள். பிறந்தது முதல் மார் மேலும் தோள் மேலும் வைத்து வளர்த்தவள் அந்தச் செவிலி. இன்னும் உறவினர் பலர் இருக்கிருர்கள். பல காலம் பழகி அவள் மன இயல்பு தெரிந்து அன்போடு அவ ஸ்டம் பேசியும் ஒழுகியும் வந்த அவ்வளவு பேர் இருக்கவும், இப்போது யாரோ ஒர் அயலானுடன் போய்விட்டாள். அத்தன பேரையும் விட அவன்தான் அவளுக்குச் சிறந்த வளுகிவிட்டான். அவனுடைய அன்பைத்தான் அவள் உணர்ந்தாளா? அயலானிடம் காதல்கொண்டு புறப்பட்டு விட்டாளே ! .

மண்மலி செல்வம் மகிழா ளாகி ஏதலன் ஒருவன் காதலன் ஆக. இந்த வீட்டில் கிரம்பியுள்ள செல்வத்தை விரும்பாதவளாய் அயலான் ஒருவன் தன் காதலளுக-பால்ே நிலம் சென்றுள் என்று சொல்ல வருகிருள்.

மனே-வீடு. மகிழாள்-விரும்பாதவள். ஏதலன்-அயலான்.)

அவள் போன இடம் எத்தகையது? கினைத்தாலே நெஞ்சு நடுங்கும். உள்ளும் புறமும் ஈரம் இல்லாத பால கிலம் அது. அதைப் பற்றிச் செவிலித்தாய் நாலு பேர் சொல்லக் கேட்கிருள். அப்படிக் கேட்ட செய்திகள் எல் லாம் அவள் அகக் கண்ணிலே உருவெடுத்துத் தோற்று கின்றன.

கதிரவன் இரக்கமின்றிக் காயும் கண்பகலில் அவள் அந்தக் கடும் பாலையில் போகவேண்டியிருக்குமே. கிழல் தரும் மரம் இல்லாத இடமாகையால் கோடைக்காலச் சூரியன் கொளுத்தி எரிப்பானே தலைக்கு மேலே உச்சியில் கதிரவன் கின்று தன் சுடரை விசுவான்; தன் கிரணங்க ளால் கொல்லாமல் கொல்லுவான். அப்போது அவன் வெம்மைக்குப் பயந்து நிழல்கூட அவரவர்கள் அடியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/34&oldid=548454" இலிருந்து மீள்விக்கப்பட்டது